ஞ்சலில் உறங்க விரும்பாதவர்கள் இவ்வுலகில் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் அந்த ஊஞ்சலில் ஏன் நம் குழந்தைகளை உறங்க வைக்கிறார்கள் என்று யாரவது யோசித்து உண்டா?.

இந்த பழக்கம் நம்மிடத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகவே உள்ளது அப்படி அந்த ஊஞ்சலில் உறங்குவதால் குழந்தைகளுக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை இங்கு முழுமையாக காண்போம்.
ஊஞ்சலில் குழந்தைகளை படுக்க வைக்கும்போது அவர்களுக்கு பல பலன்கள் கிடைகப்பெருகின்றது. அதில் முக்கியமானது நல்ல தூக்கம் தான். குழந்தைகள் ஆரோகியகமாக வளர இன்றியமையாத ஒன்றாக நல்ல உறக்கம் அமைகிறது.

ஊஞ்சல் scitamil

அப்படி என்ன இருக்கிறது இந்த ஊஞ்சலில்?

ஊஞ்சலில் குழந்தைகளை படுக்க வைத்து அதனை ஆட்டிவிடும் போது ஏற்படும் ஒருவிதமான  நகர்வு அல்லது நாம் ஆட்டிவிடும் வடிவமானது மூளையை ஒருநிலைக்கு கொண்டு வருவதால் விரைவாக தூக்கமும் ஏற்பட ஆரம்பிக்கிறது. மேலும் குழந்தைகளுக்கு முக்கியமான நினைவாற்றலையும் ஊஞ்சல் அதிகரிக்கிறது.

ஊஞ்சலில் பெரியவர்கள் உறங்கலாமா?

ஊஞ்சலில் பெரியவர்கள் உறங்கலாமா என்ற கேள்வி பலரிடம் எழுந்த நிலையில் ஜெனிவாவில் இதற்காக ஒரு ஆராய்ச்சியே நடத்தப்பட்டது, ஜெனிவா பலகலைகழகத்தில் பணிப்புரியும் நரம்பியல் விஞ்ஞானி லாரன்ஸ் பேயர் பெரியவர்களுக்கு இதனால் என்ன ஏற்படுகிறது என்பதை ஆராய்ந்தார்.

இதற்காக நல்ல உடல்நிலை உடைய 18 இளைஞ்ஞர்களை ஆய்விற்காக எடுத்துக்கொண்டு அவர்களில் பாதிபேர் சாதாரண படுக்கையிலும் மீதம் உள்ளவர்கள் ஒரு ஊஞ்சல் போன்ற படுக்கையிலும் உறங்கவைத்து ஆராய்சிகளை நடத்தினார்.
மேலும் அவர் ஒவ்வொரு நாளும் இரவும் படுக்கும் முன் அனைவரிடமும் சில வார்த்தைகளையும் எண்களையும் வைத்து ஒரு விளையாட்டு வைத்து முடித்தார்.

அவ்வாறு நடந்த ஆராய்சிகளின் முடிவில் ஊஞ்சலில் படுத்தவர்கள் நிமத்தியாகவும் (N2) அவர்கள் மிகவும் விரைவாக தூங்கிவிடுவதையும் சாதாரண படுக்கையில் உறங்கியவர்களுக்கு சற்று நேரம் கழித்து உறங்குவதையும் (16.7 நிமிடம்), நிம்மதியற்ற தூக்கம் இருப்பதையும் கண்டறிந்தார். மேலும் முன் இரவில் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட எண்களையும் வார்த்தைகளையும் இவர்களால் சிறிதளவு கூட நினைவுக் கூற இயலவில்லை ஆனால் ஊஞ்சலில் உறங்கியவர்கள் அனைவரும் அதனை சரியாக நினைவில் வைத்துள்ளனர்.
மேலும்   ஊஞ்சலில் உறங்கியவர்களால் மிகவும் ஆழ்ந்த தூக்கத்திற்கு (N3 வகை) செல்வதையும் அவர் கண்டறிந்தார். 

தூங்கமின்மையால் பாதிக்கப் படுபவர்கள் ஊஞ்சலில் உறங்குவதால் அவர்களுக்கு நல்ல உறக்கம் மற்றும் உடல் நலன் தேறும் என்பதையும் ஆய்வில் அவர் கண்டறிந்துள்ளார்.

இந்த தகவலை மற்றவர்களுக்கும் பகிர!

What is your reaction?

0
Excited
0
Happy
0
In Love

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in why its

You may also like