சமையலில்  நல்லெண்ணையை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்

நல்லெண்ணை 

இதய நோய்:

நல்லெண்ணெய்யில் சீசேமோல் என்னும் பொருள் நிறைந்துள்ளது. எனவே இதனை உணவில் அதிகம் சேர்க்கும் போது, அது இதயத்திற்கு சரியான பாதுகாப்பு அளித்து, இதய நோய் வராமல் தடுக்கிறது.

நீரிழிவு:

நல்லெண்ணெய்யில் உள்ள மக்னீசியம், இன்சுலின் சுரப்பை தடுக்கும் பொருளை எதிர்த்து போராடி, உடலில் நீரிழிவு வருவதைத் தடுக்கும்.

வலுவான எலும்புகள்:

நல்லெண்ணெய்யில் ஜிங்க் என்னும் கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது எலும்புகளில் கால்சியம் அதிகம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளும். எனவே எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில், கால்சியம் உணவுகளுடன், நல்லெண்ணெய்யையும் சாப்பிடுவது நல்லது. அதிலும் மரச் செக்கு நல்லெண்ணெய்யை பெண்கள் அதிகம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

செரிமான பிரச்னை:

மற்ற எண்ணெய்களான கடுகு மற்றும் தேங்காய் எண்ணெய்யை விட, நல்லெண்ணெய் மிகவும் லேசாக இருப்பதால், இதனை உணவில் சேர்த்து சாப்பிடும் போது, குடலியக்கமானது சீராக செயல்பட்டு, செரிமானப் பிரச்னை வராமல் இருக்கும்.

சுவாசக் கோளாறு:

நல்லெண்ணெய்யில் ஆன்டி-ஸ்பாஸ்மோடிக் நிறைந்திருப்பதால், இதனை சாப்பிடுகையில் சுவாசப் பாதையில் ஏற்படும் பிடிப்புகள் நீங்கி, சரியான முறையில் சுவாசிக்கும் வகையில் உதவியாக இருக்கும். அதிலும் ஆஸ்துமா நோயாளிகள், இதனை அதிகம் உணவில் சேர்ப்பது நல்லது.

இரத்த அழுத்தம்:

நல்லெண்ணெய்யில் இருக்கும் மக்னீசியம், இரத்த அழுத்தத்தைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும். அதிலும் நீரிழிவு நோயாளிகளுக்கு, உயர் இரத்த அழுத்தம் இருந்தால், அவர்கள் மரச் செக்கு நல்லெண்ணெய்யை சாப்பிடுவது நல்ல பலனைத் தரும்.

பளிச் பற்கள்:

தினமும் காலையில் எழுந்து நல்லெண்ணெய்யால் வாயை கொப்பளித்தால், பற்களில் தங்கியிருக்கும் சொத்தைகள் நீங்குவதோடு, பற்கள் நன்கு பளிச்சென்று ஆரோக்கியமாக இருக்கும்.

புற்றுநோய்:

நல்லெண்ணெய்யில் மக்னீசியத்தைத் தவிர, பைட்டேட் என்னும் புற்றுநோய் செல்களை அழிக்கும் பொருள் நிறைந்து உள்ளதால், அதனை உணவில் சேர்க்கும் போது, உடலில் தங்கியிருக்கும் புற்றுநோய் செல்களை அழித்து, புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.

அழகான சருமம்:

நல்லெண்ணெய்யில் நிறைந்துள்ள ஜிங்க் சத்தால், சருமத்தின் நெகிழ்வுத் தன்மை அதிகரித்து, சருமத்தில் கொலாஜெனின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். அதிலும் கர்ப்பிணிகள் நல்லெண்ணெய்யைக் கொண்டு, வயிற்றில் மசாஜ் செய்தால், ஸ்ட்ரெட்ச் மார்க் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

புரோட்டீன்:

எண்ணெய்யில் அதிகப்படியான புரோட்டீன் இருப்பது மிகவும் கடினம் தான். ஆனால் நல்லெண்ணெய்யில் மற்ற எண்ணெய்யை விட அதிகமாக 4.5-5 கிராம் புரோட்டீனானது நிறைந்துள்ளது.

குறிப்பு: நல்லெண்ணெய்யை உபயோகப்படுத்தும் போது, மரசெக்கு நல்லெண்ணெயாகப் பார்த்து வாங்கி உபயோகிக்கவும்.
#Cancer #Cooking Oil #Health
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பகிர!

What is your reaction?

0
Excited
0
Happy
0
In Love

Comments

  1. சுத்தமான நல்லெண்ணெய் என்பதை எப்படி கண்டறிவது.

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in உடல்

You may also like