மண்ணில் கலந்துள்ள நுண்-பிளாஸ்டிக் துகள்களால் மண் புழுவின் வளர்ச்சி மற்றும் எடை குறைந்து வருகிறது - ஆய்வாளர்கள்.
மண்புழு:
மண்புழுக்கள் அனிலிடா இனத்தைச் சேர்ந்த முக்கியமான மண்வாழ் உயிரினங்கள் ஆகும். அவை உருளை வடிவத்தில், பிளவுபட்ட உடல்கள் மற்றும் கால்கள் இல்லாமல் இருக்கும்.
மண்வளம் மற்றும் வளத்தை பராமரிப்பதில் மண்புழுக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மண்புழுக்கள் மண்ணின் வழியாக ஊடுருவி, செல்லும்போது நிலத்தை காற்றோட்டம் சென்று வர ஒரு வழியை உருவாக்கும். இது மண்ணின் வளம் மற்றும் கட்டமைப்பை மேம்படுத்த உதவுகிறது.
மேலும் இவை நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் மண்ணில் ஆழமாக ஊடுருவ அனுமதிக்கிறது.
மண்புழுக்கள் நிலத்தில் உள்ள கரிம பொருட்களை உடைக்க உதவுகிறது. மன்புழுக்களின் கழிவுகள் மண்ணை மேலும் வளப்படுத்த உதவுகிறது.
பறவைகள், பாலூட்டிகள் மற்றும் ஊர்வன உள்ளிட்ட பல விலங்குகளுக்கு மண்புழுக்கள் ஒரு முக்கிய உணவு மூலமாகும். இவை பொதுவாக மீன்பிடிப்பதற்கான தூண்டுகோலாகப் பயன்படுத்தப்படுகின்றன, மேலும் உரமிடும் முகவர்களாகவும் விலங்குகளுக்கான உணவு ஆதாரமாகவும் பயன்படுத்தப்படுகின்றன.
ஒட்டுமொத்தமாக, மண்புழுக்கள் சுற்றுச்சூழல் அமைப்பின் ஒரு முக்கிய பகுதியாகும், மண்ணின் ஆரோக்கியத்தை பராமரிப்பதிலும், பிற உயிரினங்களை ஆதரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
நுண் பிளாஸ்டிக் துகள்கள்:
நுண் பிளாஸ்டிக் துகள்களின் அளவு மிகுதியாக இருப்பதால் மண்ணில் வாழும் மண் புழுக்களின் வளர்ச்சி மற்றும் அதன் எடை மிகவும் குறைந்து வருவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த நுண் பிளாஸ்டிக் துகள்களின் அளவு நீரில் அதிகளவு கண்டறியப்பட்டதில் இருந்து, இதன் எண்ணிக்கை நிலம் மற்றும் காற்றிலும் அதிகளவு இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
நுண் பிளாஸ்டிக் துகள்கள் என்பவை 0.2 அங்குலத்திற்க்கும் குறைவான அளவுடைய பிளாஸ்டிக் துகள்கள் ஆகும்.
இந்த ஆராய்சி கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஏஞ்சலிய ருஷ்கின் என்பவரால் மேற்க்கொள்ளப்பட்டது.
ஏஞ்சலிய ருஷ்கின் கூறுகையில் நுண் பிளாஸ்டிக் துகள்களின் தாக்கம் மண்ணில் அதிகம் நிறைந்துள்ளது. இதனால் மண்புழுக்களின் எடை மற்றும் வளர்ச்சி மிகவும் குறைந்து வருகிறது.
ஆராய்சி:
கடல் நீரில் மீன்கள் நுண் பிளாஸ்டிக் துகள்களை உண்பதால் ஏற்படும் பாதிப்பை போல நிலத்திலும் மண்புழுக்கள் இந்த நுண் பிளாஸ்டிக் துகள்களை உண்கிறதா என்ற கோணத்தில் ஆராய்ந்தனர்.
இதில் மூன்று மண் சாடிகள் எடுத்துக்கொண்டு முதல் சாடியில் மண்ணுடன் நுண் பிளாஸ்டிக் துகள்களையும், இரண்டாவது சாடியில் மண்ணுடன் நுண் இழைகள், மற்றும் சிறு பிளாஸ்டிக் துகள்களையும் மற்றும் மூன்றாவது சாடியில் மிகவும் சுத்தமான மண் மட்டுமே நிரப்பப்பட்ட சாடியும் எடுத்துக்கொண்டு அதில் மண் புழுவை விட்டனர்.
இந்த மண்புழுக்களை பொதுவாக மண்ணின் மேல் அடுக்கில் இருந்து எடுக்கப்பட்டவை ஆகும். இது மண்ணின் அதிக ஊட்டச்சத்து நிறைந்த பகுதியாகும்.
Read Also: தாய்பாலில் நுண் பிளாஸ்டிக் துகள்கள்!
புழுக்களை மண்ணில் விடும்முன் அதன் எடை மற்றும் உயரம் போன்றவை கணக்கிடப்பட்டது. இதற்காக மண் புழுவின் உடலில் இருந்து மொத்த கழிவுகளும் வெளியேறும் வரை ஆய்வாளர்கள் காத்திருந்தனர். மொத்த கழிவுகளும் வெளியேறியப் பின்னர் அதனை அதற்கான மண் சாடியில் விட்டனர்.
மண் சாடியில் 30 நாட்களுக்கு பொதுவான புற்க்களின் வகையை (Rye Grass) வளர்த்தனர்.
ஆய்வின் முடிவு:
முப்பது நாட்களுக்கு பிறகு மண் புழுவின் எடை மற்றும் அதன் உயரம் போன்றவற்றை ஆராய்ந்ததில் சுத்தமான மண் இருந்த சாடியில் விட்ட மண் புழுவின் எடை இருந்த எடையை விட 5.1 சதவீதம் அதிகரித்தும், மற்ற சாடியில் இருந்த மண் புழுக்களின் எடை சராசரியாக 3.1 சதவீதம் குறைந்தும் காணப்பட்டது.
இதை போல மண்ணுடன் நுண் பிளாஸ்டிக் துகள்கள் நிரம்பிய சாடியில் புற்க்களின் வளர்ச்சி சுத்தமான மண் சாடியில் இருந்த புற்க்களின் வளர்ச்சியை விட மிகவும் குறைந்து இருந்தது.
ஆய்வாளர்கள் மேலும் இந்த ஆய்வினை மற்ற கோணங்களில் நடத்த உள்ளதாகவும், நுண் பிளாஸ்டிக் துகள்களின் அளவு அதிகரிப்பதால் ஏற்படும் நஞ்சுத் தன்மையால் தான் உடல் எடை குறைந்ததா அல்லது நுண் பிளாஸ்டிக் துகள்கள் மண் புழுவின் குடலை பாதித்ததால் தான் உடல் எடை குறைந்ததா என்று அடுத்த ஆய்வையும் முடுக்கி விட்டுள்ளனர்.
மேலும் நுண் பிளாஸ்டிக் நுகள்களின் பாதிப்பால் மண் புழுவின் வளர்ச்சிக்கு ஏற்பட்ட பாதிப்புகள் புற்க்களின் வளர்ச்சியும் பாதிப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பிளாஸ்டிக் பொருட்களை முழுமையாக தடை செய்யலாம்