இந்தியாவில் ஆண் குழந்தைகள் வேண்டும் என்ற விருப்பம் மற்றும் பாலின சமநிலை குறித்த பிரச்சினைகள் பல ஆண்டுகளாகவே இந்திய சமூகத்தில் முக்கியமான பிரச்சினையாகத் திகழ்கிறது. NFHS-4 (National Family Health Survey-4) தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, இந்த ஆய்வு ஆண் குழந்தைகள் விருப்பத்தின் தன்மை மற்றும் அதன் பின்னணி காரணிகளை ஆராய்வோம் வாருங்கள்.
மகன் பெறும் விருப்பம், பலபடிநிலைகளில் இந்திய சமூகத்தில் வேரூன்றி உள்ளது. இதற்கு அடிப்படை காரணமாக பொருளாதார நிலை, மதக் கண்ணோட்டம், பாரம்பரிய மரபுகள் மற்றும் பெண்களின் கல்வி நிலை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. குறிப்பாக, தகப்பனின் ஆன்மா சொர்க்கத்தில் அமைதி அடைவதற்கும், அவரின் ஆன்மீக கடமைகளை நிறைவேற்றுவதற்கும் மகன் அவசியம் என்பதான பாரம்பரியக் கருத்து இந்து மதத்தில் வேரூன்றி உள்ளது. இதன் விளைவாக, மகனைப் பெறும் விருப்பம் இந்திய சமூகத்தில் பரவலாகவே காணப்படுகிறது.
குடும்பத்தின் பொருளாதார நிலையும் மகன் விருப்பத்தில் பெரிய பங்காற்றுகிறது. குறைந்த பொருளாதார நிலை கொண்ட குடும்பங்களில் மகன் பாரம்பரிய குலமரபைத் தொடரும் என்று கருதுவதால் மகனைப் பெறும் விருப்பம் அதிகமாகவே உள்ளது. குறிப்பாக, பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில், மகன் பிறக்க வேண்டிய கட்டாயத்தை நம்பும் எண்ணிக்கை உயர்வாகவே காணப்படுகிறது. இது வட இந்திய மாநிலங்களில் பொதுவான நிலையில் காணப்படும் ஒரு கலாச்சார பார்வை ஆகும். தென் இந்தியாவில், குறிப்பாக கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில், மகன் பெறும் விருப்பம் குறைவாகவே காணப்படுகிறது, அங்கு பெண்களின் கல்வி நிலை மற்றும் சமூக பொருளாதார நிலை உயர்ந்துள்ளது. இதனால் பெண்கள் தங்கள் உரிமைகளை முழுமையாக உணர முடிகிறது, மற்றும் பெண் குழந்தைகளுக்கும் சம உரிமைகள் கிடைக்கின்றன.
மகன் விருப்பம் பெரும்பாலும் பெண்களின் கல்வி நிலை மற்றும் பணிநிலை ஆகியவற்றுடன் நேர்மறையான உறவை வெளிப்படுத்துகிறது. கல்வி கற்ற பெண்களுக்கு மகன் பெறும் விருப்பம் 43% குறைவாகவே உள்ளது என்பதையும் இந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது. கல்வி கற்ற பெண்கள் பெரும்பாலும் குடும்பத்திற்குள் குழந்தைகளின் பாலினத்தை அடிப்படையாகக் கொண்டு முடிவுகளை எடுக்காமல், சமமான நிதானமான அணுகுமுறையுடன் இருப்பதைக் காட்டுகிறது. பெண்களின் கல்வி நிலை உயர்ந்தால், மகன் பெறும் விருப்பம் குறைந்து மகள் குழந்தைகளின் மதிப்பும் மேம்படுகிறது. இந்த நிலை, குறிப்பாக சமநிலையான சமூக முறைகள் மற்றும் நல்லொழுக்கத்தை நிலைநாட்ட உதவுகிறது.
இந்த பிரச்சினைக்கு தீர்வாக அரசாங்கம் மற்றும் சமூக அமைப்புகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மகளிர் கல்வி மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது மூலமாக மகன் பெறும் விருப்பத்தை குறைக்க முடியுமென நிபுணர்கள் கருதுகின்றனர். அதேபோல், PCPNDT (Pre-Conception and Pre-Natal Diagnostic Techniques) சட்டத்தை வலுப்படுத்துவதன் மூலம் பாலினத் தேர்வு செய்வதைத் தடுக்க முடியும். மகளிர் உரிமைகள் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் சமூகத்தில் பொதுவெளியில் பேசப்பட வேண்டும். பெண்களுக்கு சம உரிமைகள் வழங்குவது மட்டுமன்றி, அவர்களின் சமூக பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு அரசாங்கத்தின் திட்டங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
அதிகமாகவே மகன் விருப்பத்தை கொண்டுள்ள மாநிலங்களில் பாரம்பரியப் பழக்கவழக்கங்களை மாற்றும் நோக்கத்துடன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தால் மக்கள் பார்வையில் மாற்றத்தை உருவாக்க முடியும். மேலும், சமூகத்தின் மேலோங்கிய வளர்ச்சிக்கும் பெண்கள் உரிமைகள் மேம்பாட்டுக்கும் குறைவான பாலின பேதம் மற்றும் மகள் குழந்தைகளின் உரிமைகளை உறுதி செய்வதன் மூலம் சாதனை செய்ய முடியும்.
ஆண்களின் மன அழுத்த அனுபவங்கள்: இந்தியாவின் சிறப்புப் பார்வை
மன அழுத்தம் என்பது வயது, பாலினம் அல்லது கலாச்சாரம் பார்க்காமல், கோடிக்கணக்கான மக்களை ஆட்டிப்படைக்கும் ஒரு உலகளாவிய பிரச்சனை. ஆனால், ஆண்கள் இந்த உணர்வுகளை பெண்களை விட…
டிஜிட்டல் கைது: இணையக் குற்றங்களின் பிடியில் சிக்கிய நம் சமுதாயம்
இன்றைய இணைய யுகத்தில், தொழில்நுட்பம் நம் வாழ்வை எளிமைப் படுத்தியிருந்தாலும், அதன் இருண்ட பக்கமும் வெளிப்பட்டு வருகிறது. இணையக் குற்றவாளிகள், தொடர்ந்து புதிய தந்திரங்களை கையாண்டு, பொதுமக்களை…
நிலவில் எரிமலை தடையங்கள்
நிலவின் தென் துருவத்தில் இருந்து சீனாவின் சாங்’ஈ-6 விண்கலம் பூமிக்கு கொண்டு வந்த நிலக்கற்களின் முதலாவது மாதிரிகள், அங்கு நவீன எரிமலைச் செயல்பாடுகள் நடந்ததற்கான அதிர்ச்சிகரமான அறிகுறிகளை…
புரோஸ்டேட் புற்றுநோய் உருவாக பூச்சிக்கொல்லிகள் எவ்வாறு காரணமாக அமைகிறது
பூச்சிக்கொல்லிகள் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய்: ஒரு ஆய்வு வெளிப்படுத்திய உண்மைகள்
இந்தியாவில் ஆண் குழந்தை விருப்பத்தின் பின்னணி
இந்தியாவில் ஆண் குழந்தைகள் வேண்டும் என்ற விருப்பம் மற்றும் பாலின சமநிலை குறித்த பிரச்சினைகள் பல ஆண்டுகளாகவே இந்திய சமூகத்தில் முக்கியமான பிரச்சினையாகத் திகழ்கிறது. NFHS-4 (National…
வயதாவதை தாமதப்படுத்தும் NMN – ஆய்வுகள் என்ன கூறுகிறது ?
மனிதர்கள் தங்களின் வாழ்நாளை நீடிப்பதற்கான முயற்சியில், நிக்கோட்டினமிட் மோனோநியூக்ளியோடைட் (Nicotinamide Mononucleotide – NMN) என்ற பொருளுக்கு கணிசமான கவனம் கிடைத்துள்ளது. உயிரணுக்களின் மின்னூட்டத்தை சீராக்கவும், சீரமைப்பதற்கும்…