- தேதி:செப்டம்பர் 24, 2019.
- செய்தி: குயின்ஸ்லேண்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (QUT).
- சுருக்கம்: விஞ்ஞானிகள் கடலில் கொட்டிய எண்ணெய்யை மிகவும் எளிய முறையில் சுத்தம் செய்வதற்கான தீர்வை கண்டறிந்துள்ளனர்.
கடந்த 20 வருடங்களில் பெருங்கடல்களில் 700க்கும் அதிகமான எண்ணெய் கசிவுகள் (அ) விபத்துக்கள் நடந்துள்ளன, இதனால் கடல் வாழ் உயிரினங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
ஜிங் சான் சு (QUT-யின் உதவி பேராசிரியர்) கூறுகையில் QUT யின் அறிவியல் மற்றும் பொறியியல் குழு ஆய்வாளர்கள் கடலில் ஏற்படும் எண்ணெய் கசிவை மிகவும் குறைந்த செலவில் விரைவாக சுத்தம் செய்யும் முறையை கண்டறிந்துள்ளதாக தெரிவித்தார்.
கடலில் எண்ணெய் கசிவு ஏற்பட்ட இடங்களில் நுரை போன்ற ஒரு எடை குறைவான படலத்தை ஏற்படுத்தி கடல் நீருக்கும் நுரைக்கும் இடையில் உள்ள எண்ணெய் படலத்தை மட்டும் அப்படியே உறிஞ்சுக்கொள்ளும் வகையில் இது இருக்கும்.
கடந்த சில வருடங்களில் எண்ணெய் கசிவால் கடல் வாழ் உயிரினங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளன. இதில் 1989 ஆம் ஆண்டு அலாஸ்காவில் நிகழ்ந்த எக்ஸ்சான் வால்டே எண்ணெய் கசிவு தான் இதுவரை பதிவு செய்ததில் மிகப்பெரிய எண்ணெய் கசிவு ஆகும், இதில் 37,000 மெட்ரிக் டன் அளவுள்ள கச்சா எண்ணெய் கடல் நீரில் கசிந்தது. இது மனிதனால் ஏற்பட்ட மிகப்பெரிய சுற்றுசூழல் சீர்கேடாகும் என ஜிங் சான் சு தெரிவித்தார்.
சமீபத்தில் மெக்ஸிகோவில் 2010 ஆம் ஆண்டு ஆழ்கடலில் நிகழ்ந்த எண்ணெய் விபத்து அடுத்த பெரிய விபத்தாக உள்ளது இது ஒரு பெட்ரோலிய தொழிற்சாலையின் மூலம் ஏற்பட்ட மிகப்பெரிய விபத்தாகும்.
தற்போது எண்ணெய் கசிவை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் பல தொழில்நுட்பங்கள் மிகவும் சிக்கலானதாகவும் சுற்றுசூழலுக்கு மிகவும் ஆபத்தானதாகவும் உள்ளது.
சார்பேண்ட்ஸ், பெரிய பஞ்சுகள் போன்றவை தற்போது எண்ணெய் கசிவை சுத்தம் செய்வதில் பயன்பாட்டில் இருந்தாலும் எண்ணெய் கசிந்த இடங்களில் கடைசியாக உள்ள எண்ணெய்யை மட்டுமே நீக்க இதனை பயன்படுத்துகின்றனர். ஆனால் கடல் மாசுபாட்டை தவிர்க்க வேண்டுமெனில் எண்ணெய் கசிந்த சில நிமிடங்களில் அதை நீக்குவதே ஒரே தீர்வாகும்.
எனவே நாங்கள் நம் வீட்டில், தொழிற்கூடங்களில், தொழிற்சாலைகளில் மற்றும் பல இடங்களில் பயன்படுத்தும் இரட்டை புறபரப்பி செயலிகள் (Hybrid-Surfactans) மூலம் ஒரு தீர்வை கண்டறிந்துள்ளோம்.
இரட்டை புறபரப்பி செயலிகள் (Hybrid-Surfactans) என்பவை இரண்டு திரவங்களுக்கு இடைப்பட்ட (அ) ஒரு திரவம் மற்றும் ஒரு வாயுவுக்கு இடைப்பட்ட (அ) ஒரு திரவம் மற்றும் திண்மத்திற்கு இடைப்பட்ட மேற்பரப்பு விசையை (Surface Tension) குறைக்கும் காரணிகள் ஆகும்.
எண்ணெய் கசிவு ஏற்பட்ட சில நிமிடங்களில் இந்த இரட்டை புறபரப்பி செயலிகளை எண்ணெய் படலத்தின் மேல் தெளிப்பதன் (அ) பரப்புவதன் மூலம் எண்ணெய் படலத்திற்கும் கடல் நீருக்கும் இடையில் உள்ள மேற்பரப்பு விசையை இது குறைத்துவிடுகிறது, இதன் பின் புறபரப்பிகளால் ஏற்படும் பெரும் நுரை போன்ற அமைப்பு எண்ணெய்யை அப்படியே உறிஞ்சுக்கொண்டு அதனை சிதைத்துவிடும் படி இதனை உருவாக்கியுள்ளோம்.
இதனால் இதனை ஜிங் சான் சு ஹைபிரிட் புறபரப்பிகள் என்று அழைக்கிறார். காரணம் இவர்கள் உருவாக்கிய புறபரப்பி செயலிகளில் எண்ணெய்யை சிதைக்கும் மூலக்கூறுகள், ஸ்டெரிக் அமிலம் மற்றும் நீரை சிதைக்கக்கூடிய அலுமினா நானோ பைபர் (அ) நார்கள் அடங்கியுள்ளன.
இந்த இரட்டை புறபரப்பிகல் எண்ணெய்யை சிதைத்து நீராகவும் (Hydropholic) பின் அந்த நீரிலிருந்து எண்ணெய்யாகவும் (Lipopholic) உருப்பெறும் திறனுடையதாக இருக்கிறது என ஜிங் சான் சு கூறுகிறார்.
இனி கடலில் ஏற்படும் எண்ணெய் கசிவை மிக விரைவாக இந்த செயல்முறையில் சுத்தம் செய்ய இயலும் என்று எதிர்பார்க்கலாம்.