ஆய்வு சுருக்கம்:
பிறந்த குழந்தைக்கு தனது ஆரம்ப காலங்களில் ஏற்படும் நோய் பாதிப்புகள் அவர்களது நோய் தடைக்காப்பு மண்டலத்தை பலப்படுத்தி பிற்காலத்தில் ஏற்படும் நோய்களிடம் இருந்து அவர்களை காக்கிறது.
ஆனால் மிகவும் சுத்தமான இடத்தில் ஒரு குழந்தை வளரும் போது அவர்களுக்கு ஏதேனும் நோய் பாதிப்புகள் ஏற்பட்டால் நோய் தடைக்காப்பு மண்டலம் அதாவது இரத்த வெள்ளை அணுக்களின் அளவு அதிகரித்து இந்த இரத்த புற்றுநோய் ஏற்படுவதற்கு வழி வகை செய்வதாக ஆய்வில் கண்டறிந்துள்ளதாக கிரேவேஸ் கூறுகிறார்.
ஆய்வறிக்கை:
பிறந்த குழந்தைகள் தனது ஆரம்பக் காலகட்டத்தில் மிகவும் சுத்தமாக உள்ள இடங்களில் வளரும் போது அவர்களுக்கு இரத்த புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக மெல் கிரேவேஸ் என்ற ஆய்வாளர் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இரத்தப் புற்றுநோய்
இரத்தப் புற்றுநோய் பல காரணங்களால் ஏற்படுவதாக கருதப்படுகிறது, இதில் முதலில் மரபியல் காரணமாக பிறக்கும் போதே ஏற்படுவது ஒரு வகை, மற்றொன்று பிறந்த பின்னர் ஏதேனும் ஒரு காரணியால் ஏற்படும் இரத்தப் புற்றுநோய் வகை.
Also Read: ஆயுளை நீட்டிக்கும் ஆய்வு வெற்றி, விரைவில் மனிதனில் சோதனை!
இதில் இவர் ஆய்வு செய்து வெளியிட்டது இந்த இரண்டாவது வகையை தான்.
இவர் 30 ஆண்டுகளாக இந்த வகை புற்றுநோய் எப்படி ஏற்படுகிறது என்பதைப் பற்றி ஆராய்ந்ததில் மிகவும் சுத்தமான இடத்தில் வளரும் குழந்தைகளுக்கு இந்த வகை புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக கண்டறிந்துளார்.
அதாவது பிறந்த குழந்தைக்கு தனது ஆரம்ப காலங்களில் ஏற்படும் நோய் பாதிப்புகள் அவர்களது நோய் தடைக்காப்பு மண்டலத்தை பலப்படுத்தி பிற்காலத்தில் ஏற்படும் நோய்களிடம் இருந்து அவர்களை காக்கிறது, ஆனால் மிகவும் சுத்தமான இடத்தில் ஒரு குழந்தை வளரும் போது அவர்களுக்கு ஏதேனும் நோய் பாதிப்புகள் ஏற்பட்டால் நோய் தடைக்காப்பு மண்டலம் அதாவது இரத்த வெள்ளை அணுக்களின் அளவு அதிகரித்து இந்த இரத்த புற்றுநோய் ஏற்படுவதற்கு வழி வகை செய்வதாக ஆய்வில் கண்டறிந்துள்ளதாக கிரேவேஸ் கூறுகிறார்.
மேலும் மற்றொரு ஆய்வறிக்கையில் இவர் இரத்த புற்றுநோயானது மின் காந்த கதிர்வீச்சு மற்றும் சுற்றுப்புற காரணிகளும் காரணமாக அமைய வாய்ப்புள்ளதாகவும் கூறிவுள்ளார்.
இந்த ஆய்வில் இது வரையில் சுத்தமான இடம் மட்டுமே முக்கிய காரணம் என்று எவ்விதமான உறுதியும் இல்லாததால் மேலும் பல ஆய்வுகளை மேற்கொள்ள இருப்பதாக NHS குழுமத்தில் உள்ள டோன்னா லான்காஸ்டர் என்ற புற்றுநோய் மருத்துவர் கூறியுள்ளார்.
இரத்த புற்றுநோயானது ஒவ்வொரு வருடமும் அதிகரித்த வன்னம் உள்ளதாக ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. அதாவது 2016 ஆம் ஆண்டின் நிலவரப்படி 53,000 க்கும் அதிகமானோர் இரத்த புற்றுநோயால் பதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அதில் 1400 க்கும் அதிகமானோர் இதனால் உயிரிழந்ததாகவும் அமெரிக்க புற்றுநோய் சங்கம் தெரிவித்துள்ளது.
Also Read: தாய்பாலில் நுண் பிளாஸ்டிக் துகள்கள்!
தகவல்கள்:
ஆய்வறிக்கை: படிக்க
வெளியிட்டவர்: மெல் கிரேவேஸ்