பிளாஸ்டிக் பாயில் படுப்பவர்களுக்கு ஒரு கெட்டசெய்தி !

வாதம் போக்கும், சூடு தணிக்கும்… கோரை, ஈச்சம் பாய் நல்லது!

Image result for கோர பாய்
மனிதன் ஓய்வெடுக்கும் செயலே தூக்கம். சிறுவர்களாக இருந்தாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி, தூங்கும் ஒருவரை எழுப்புவது பாவம் என்கிற அளவுக்கு அதன் மேன்மையை நம் முன்னோர் நமக்கு கற்பித்துள்ளனர். அந்த அளவுக்கு மனிதனுக்கு ஆகப்பெரும் முக்கியத்துவம் உடையதாக தூக்கம் இருக்கிறது.
தூக்கம் மனிதனுக்கு தேவையான ஒன்றே. ஆனால் நாம் தற்போது படுத்துறங்கும் பிளாஸ்டிக் பாய்கள் நமக்கு ஆரோக்கியமானவையா என்றால் நிச்சயமாக இல்லை. அவற்றால் உடலுக்கு பல்வேறு தீமைகளே விழைகின்றன.
அப்படியானால் நாம் எதில் படுத்து உறங்குவது என்பதைப் பற்றிச் சித்த மருத்துவர், இரா.கணபதி கூறுகிறார்.
பச்சைத் தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படும் பாய்களில் படுத்துறங்குது நமக்கு நிம்மதியான உறக்கத்தைத் தருவதோடு மட்டுமல்லாமல் பலவித நன்மைகளையும் அளிக்கின்றன. ஒற்றை விதையினால் முளைக்கும் தாவரங்கள், மரங்கள் இயல்பாகவே குளிர்ச்சியைத் தரும் என்பது அறிவியல்பூர்வமான உண்மையாகும்.
தென்னங் கீற்று, பனை ஓலை, தாழை மடல், நாணல் மற்றும் கோரைப்புற்களைக் கொண்டு பாய்கள் தயாரிக்கப்படுகின்றன. முதன்முதலில் தென்னை, பனை ஓலைகளைக் கொண்டே தயாரிக்கப்பட்டன. பின்பு நாணல் புற்களைக் கொண்டும், நீர்ப்பகுதிகளில் வளரும் கோரைப்புற்களைக் கொண்டும் பாய்கள் தயாரிக்கப்பட்டன. இப்போது கம்பளி, பிரம்பு, ஈச்சம், பேரீச்சம், மூங்கில், இலவம் போன்றவற்றில் இருந்தும் பாய்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை உடல்நலனுக்கு உகந்தவையாகும்.
இயற்கை முறைகளில் தயாரிக்கப்படும் பாய்களில் படுத்துறங்குவதால் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.
மூட்டு, முதுகு, தசை சம்பந்தமான பிரச்னைகள் குறைகின்றன.
உடலின் ரத்த ஓட்டம் சீராகும். உடலுக்கு நல்ல உற்சாகத்தைத் தரக்கூடியது.
கர்ப்பிணிகள் பாயில் படுத்து உறங்குவதால் அவர்களது இடுப்பு எலும்பு விரிவடையும். இதனால் சுகப்பிரசவம் ஏற்பட அதிக வாய்ப்புண்டு.
ஆண்களுக்கு மார்புத்தசை தளர்ந்து விரிவடையும். இதனால் நல்ல தேக ஆரோக்கியத்தைப் பெறலாம்.
வகைகள்

  • கோரைப் பாய்கள் உடல் சூட்டைத் தணித்து உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியது

  • கம்பளிப் பாய்கள் குளிரினால் ஏற்படும் ஜுரத்தைப் போக்கும்.

  • ரத்தினக் கம்பளமானது, ஆபத்தான கிருமிகளால் எற்படும் நோய்களில் இருந்து நம்மைப் பாதுகாக்கிறது.

  • உடலில் தாதுச் சத்து மற்றும் ரத்தம் குறைவாக இருப்பவர்கள் இலவம் பஞ்சால் ஆன படுக்கைகளைப் பயன்படுத்தலாம்.

  • ஈச்சம்பாய் வாத நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது.

  • தாழம்பாய் உடலில் உள்ள பித்தத்தைப் போக்கக்கூடியது.

தூக்கம்
பாயில் படுத்து உறங்குவது என்பது கிட்டத்தட்ட யோகாசனம் செய்ததுபோன்ற நன்மையைத் தரக்கூடியது. தரையில் பாய் விரித்துப் படுப்பதன் மூலம், நம் உடலில் புவியீர்ப்பு விசையானது சீராகப் பரவுகிறது. இது உடலில் உள்ள நாடிகளுக்குச் சக்தியைக் கொடுக்கிறது. இதனால் நம் உடலின் வளர்ச்சி அதிகரிக்கிறது. ஞாபக சக்தியைப் பெருக்கும். உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியத்தைத் தந்து நீண்டநாள்கள் சீரும், சிறப்புமாக வாழ வழிவகுக்கும்.
Exit mobile version