தொழில்நுட்பம் எவ்வளவு தான் முன்னேறிய நிலையில் இருந்தாலும், நாம் எடுத்த பழைய புகைப்படம் தான் இன்றும் அழகாக தெரியும்.
அதைப்போல முதன் முறையாக எடுத்த சில அரிய புகைப்படங்களின் தொங்குப்புகளை பார்க்கலாம் வாருங்கள்.
முதல் புகைப்படம்: புவி
இதனைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள்:
- 1946 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது
- 1950 ஆம் ஆண்டு வரை இது வெளியிடப்படவில்லை
- V-2 No. 13 என்ற ராக்கெட்டின் மூலம் இது எடுக்கப்பட்டது
முதல் புகைப்படம்: நிலவும் புவியும்
இதனைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள்:
- 1977 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது
- நிலவும் புவியும் ஒரே படத்தில் இருக்கும் முதல் புகைப்படம்
- NOAA National Environmental Satellite ஆல் வெளியிடப்பட்டது
Also Read: புகைப்பதை நிறுத்துவதால் உடலில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் மற்றும் நன்மைகள் | SciTamil
முதல் புகைப்படம்: நிலவு
இதனைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள்:
- 1840 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது
- நிலவின் முதல் புகைப்படம் ட்ரேபர் என்பவரின் வீட்டு மாடியில் உள்ள ஆய்வகத்தில் இருந்து எடுக்கப்பட்டது
முதல் புகைப்படம்: விமான விபத்து
இதனைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள்:
- 1908 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது
- அமெரிக்க ராணுவமும் ஒர்வில்லி ரைட்டும் பயணித்த விமான விபத்து
- இதில் தாமஸ் செல்பிரிஜ் என்பவர் உயிரிழந்தார்
Also Read: செவ்வாயில் இனி நெல் விளையும் – புதிய ஆய்வு வெற்றி !
முதல் புகைப்படம்: மின்னல்
இதனைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள்:
- 1982 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது
- வில்லியம் ஜென்னிங்ஸ் என்ற ஆய்வாளர் மின்னலை பற்றி விளக்க எடுத்த புகைப்படம்
முதல் புகைப்படம்: நிலவில் இருந்து புவி
இதனைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள்:
- 1966 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது
- நிலவை பற்றி ஆராய அனுப்பப்பட்ட செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்டது
முதல் புகைப்படம்: செவ்வாயின் புகைப்படம்
இதனைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள்:
- 1976 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது
- வைகிங் 1 என்ற விண்கலன் மூலம் எடுக்கப்பட்டது
- நாசாவால் இது ஏவப்பட்டது – தரையை அடைந்தப்பின் தான் தரை இறங்கிய இடத்தை எடுத்த புகைப்படம்
முதல் புகைப்படம்: கருத்துளை
இதனைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள்:
- 2019 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது
- 200 ஆய்வாளர்களால் சேகரிக்கப்பட்ட தரவுகளை கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படம்
- சூப்பர் கம்பியூட்டரின் உதவியை கொண்டு 10,00,000 GB தரவுகளை கொண்டு இந்த ஒரு புகைப்படத்தை உருவாக்கினர்
முதல் புகைப்படம்: நிலவின் மறுபக்கம்
இதனைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள்:
- 2019 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது
- சீனாவின் சாங் இ 4 என்ற விண்கலன் நிலவின் மறுபக்கத்தை அடைந்தபோது எடுத்தப் படம்
இதனைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள்:
- 1976 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது
- University of Texas Medical Branch எபோலோ பற்றிய ஆய்வின்போது எடுத்த முதல் புகைப்படம்