மெட்டி ஏன் அணியவேண்டும் ?

மெட்டி

Indian Womens Wear Toe Rings jpg
மெட்டி

பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும் கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவித தொடர்பு உள்ளது. கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர்ச் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை.

அது மட்டுமின்றி வெள்ளியில் செய்த மெட்டியைத் தான் அணிய வேண்டும். ஏனெனில் வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்களை நிவாரனம் செய்யும் ஆற்றல் உள்ளதாக கூறப்படுகிறது .

பெண்கள் கர்ப்பம் அடையும்போது ஏற்படும் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படும். கர்ப்பகாலத்தின் போது இந்த நரம்பினை அழுத்தி தேய்த்தால் மேற்கண்ட நோவுகள் குறையும்.

இதனை எப்போதும் செய்துக் கொண்டு இருக்க முடியாது என்பதற்காக வெள்ளியிலான மெட்டி அணிவித்தார்கள். காரணம், நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்த்து நோவைக் குறைக்கிறது.

கருப்பை பாதிப்புகள் ஏதும் வரக்கூடாது என்பதால்தான் காலில் மிஞ்சி அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியிருக்கின்றார்கள்.

தெரியுமா?

மெட்டி ஆண்களுக்கான அணிகலனாகவும் இருந்துள்ளது.

திருமணமான பெண் தாலியும் ஆண் மெட்டி அணிவதும் முன்பு வழக்கமாக இருந்துள்ளது.

மெட்டி குறிந்து சங்க காலப் பாடல்களை தேடும் முனைப்பில் உள்ளோம்!.

உங்களுக்கு தெரிந்த பாடல்களில் ஆண்கள் மெட்டி பற்றிய குறிப்புகள் இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தவும்.

Exit mobile version