மொபைல் மூலம் குழந்தைகளை மனநோயாளிகளாக மாற்றும் பெற்றோர்கள் | Child Health

mobile%2Bphone%2B2%2B

மொபைல் மூலம் குழந்தைகளை மனநோயாளிகளாக மாற்றும் பெற்றோர்கள்!

இன்றைய தலைமுறைக் குழந்தைகளுக்கு மனநோய் பாதிப்பு என்பது சாதாரனமாக காணப்படுகிறது என்பதை உங்களால் நம்பமுடிகிறதா?

  1. உங்கள் வீட்டின் இளைய உறுப்பினர்களை உங்கள் செல்போனை பயன்படுத்த அனுமதிக்கிறீர்களா? 
  2. தொலைபேசியில் பேசுவதை உங்கள் பிள்ளை நீண்ட நேரம் செலவிடுகிறாரா? 
  3. உங்கள் பிள்ளைக்கு மொபைல் ஃபோன் கொடுப்பதால் எந்த பாதிப்பும்  இல்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
ஆம் என்றால், அவ்வாறு செய்வதற்கு முன்பு இருமுறை யோசிக்க வேண்டும்!

தற்போது மொபைல் போன்கள் ஒரு பரவலான நிகழ்வுகளாக மாறிவிட்டன. இந்த பாக்கெட் அளவிலான கருவிகள் ஒரு மினி கணினிக்கு ஈடாக உள்ளது. இந்த செல்பேசியால் பெரியவர்கள் மட்டுமல்ல குழந்தைகளையும் பாதிக்கிறது. ஆனால் மொபைல் போன்கள் குழந்தைகளை எந்த அளவிற்கு பாதிக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா?

தற்போது கேமிங் டிஸ் -ஆர்டர் ஐ மனநோய் பிரிவுக்கு WHO (world health organisation )மாற்றியுள்ளது 

கேமிங் டிஸ் -ஆர்டர் என்பது மொபைல் போன் பயன்படுத்தும் போது அல்லது அதில் கேம் போன்றவற்றை தொடர்ச்சியாக  விளையாடும் போது குழந்தைகளுக்கு ஏற்படும் மனநோய் ஆகும்.

மொபைல் போன்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் 

இன்றைய தலைமுறை குழந்தைகள் பிறக்கும் தருவாயில் இருந்து தன் வாழ்நாள் முழுவதும் கதிர்வீச்சுகளால் சூழப்பட்டு உள்ளனர். இந்த கதிர்வீச்சுகள் கீழ்கண்ட பதிப்புகளை குழந்தைகளுக்கு ஏற்ப்படுத்துகின்றது.

1. உடல்நலக் கோளாறு: 

சமீபத்திய ஆண்டுகளில், உடலில் செல் போன் கதிர்வீச்சு தாக்கம் பற்றி நிறைய ஊகங்கள் வந்தவாறு உள்ளன. இதில் அமெரிக்கன் மெடிக்கல் அசோஸியேஷன் பத்திரிகையின் ஒரு ஆய்வானது, மூளையின் செயல்பாடுகளில் மொபைல் ஃபோன்கள் ஏற்படக்கூடிய விளைவுகளை ஆராயும்போது பல கீழ் குறிபிட்டுள்ள கோளாறுகளைக் கண்டறிந்துள்ளனர்.

                                      

மாலிகன்ட் புற்று கட்டிகள்:

மொபைல் போன்களைப் பயன்படுத்தும் குழந்தைகள் மூளை மற்றும் காதுகளில் வீரியம் இல்லாத புற்று கட்டி உருவாக்குவதற்கான சாத்தியக்கூறு இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.

புற்றுநோய்:

WHO ஆனது செல்போன் கதிர்வீச்சு வகைகளை ‘மனிதர்களுக்கு புற்றுநோய்க்கானதாக‘ வகைப்படுத்தியுள்ளது. குழந்தைகள் பெரியவர்களை விட 60% அதிகளவு கதிர்வீச்சை உள்வாங்குகின்றனர், அவர்களின் மூளையில்யுள்ள  மெல்லிய தோல், திசுக்கள் மற்றும் எலும்புகள் பெரியவர்களை விட 2 மடங்கு அதிக கதிர்வீச்சை உள்வாங்க தூண்டுகிறது. இதன் காரணமாக அவர்களின் வளரும் நரம்பு மண்டலம் இந்த ‘புற்றுநோய்க்கு’ விரைவாக பாதிக்கப்படக்கூடியதாக இருக்கிறது.

மூளை பாதிப்பு:

2 நிமிட செல்பேசியால் பேசுவதால் கதிர்வீச்சுகள் குழந்தைளின் மூளையில் நடக்கும் எலெக்ட்ரிக் சமிக்கைகளை 1 மணி நேரத்திற்கு நிருத்துகிறது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர், இதனால் அவர்களின் மூளையின் திறன் குறைந்து அவர்களின் படிப்பில் நாட்டம் செலுத்தாமல் போகும் அபாயமுள்ளது.

2. கல்வி பாதிப்பு 

இளம் வயதினரைப் போலவே குழந்தைகள் மொபைல் போன்களுக்கு அடிமையாகி விடுகின்றனர். அவர்கள் விளையாட, அரட்டை மற்றும் உணவு உண்ணும் வேளையில் கூட செல்பேசியை உபயோகிப்பதால் அவர்களுக்கு படிப்பின் மீது உள்ள ஆர்வம் குறைந்துவிடுவதாக ஆய்வில் தெரிவிகின்றனர்.

                              

3. பொருத்தமற்ற நடத்தை:

செல் ஃபோன்களின் பயன்பாடானது குழந்தைகளுக்கு பொருத்தமற்ற நடத்தைகளில் ஈடுபட வழிவகுக்கும். இளைஞர்களுடனான உரையானது மற்றும் பொருத்தமற்ற படங்களை அனுப்புவது என்பது வளர்ந்து வரும் பிரச்சினையாகவே உள்ளது. குழந்தைகள் அவர்களின் மல்டிமீடியா சாதனங்களிலிருந்து ஆபாச தளங்களை அணுகவும் வாய்ப்புள்ளது .

குழந்தைகளை  மொபைல் போனிலிருந்து  பாதுகாக்க :

ஒரு பெற்றோராக, மொபைல் போன்களின் விளைவிலிருந்து உங்கள் குழந்தைகளை பாதுகாப்பது என்பது இன்றியமையாத ஒன்றாகும் . குழந்தைகளை பாதுகாக்க வேண்டிய வழிமுறைகள் பின்வருமாறு:
  • உங்கள் பிள்ளை 16 வயதிற்குள் இருந்தால், செல்போன் கொடுக்க வேண்டாம். மொபைல் கதிர்வீச்சு விளைவுகளை தாங்கிக்கொள்ள 16 வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளால் இயலாது.
  • உங்கள் பிள்ளை நேரடியாக தனது தலையருகில் மொபைல் போன் வைத்திருப்பதை அனுமதிக்காதீர்கள். (அதற்கு பதிலாக ஒரு ஹெட்செட் பயன்படுத்த அறிவுறுத்துங்கள் அதுவும் சில மணி நேரங்களுக்கு மட்டுமே.)

                                       

  • உங்கள் பிள்ளை பஸ்கள், ரயில்கள், கார்கள் மற்றும் லிஃப்ட்களில்  செல் போன் பயன்படுத்த அனுமதிக்காதீர்கள். 

மெட்டல் (metals) மூலம் சிக்னலை வெளியேற்றுவதற்கு மொபைல் போன் கடினமாக வேலை செய்கிறது, இது அதிகபட்ச அளவு மின்திறனை பயன்படுத்தும்போது மொபைல் வெடிக்கவும் செய்கிறது .

  • சிக்னல் பலவீனமாக இருக்கும் போது உங்கள் பிள்ளை செல்போன் பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம். தொலைபேசி புதிய ரிலே ஆண்டெனாவுடன் இணைக்க முயற்சிக்கும்போது அதிகபட்சமாக மின்திறனை உபயோகிப்பதால் வெடிக்கச் செய்கிறது.

குழந்தைகள் சுற்றி செல் போன் பயன்பாடு குறைக்க.

  • உங்கள் வீட்டிற்கு அருகில் அல்லது உங்கள் குழந்தையின் பள்ளிக்கூடத்தில் மொபைல் ஃபோன் மாஸ்டு அல்லது நெட்வொர்க் கோபுரம் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

                                       

  • குழந்தைகள் பள்ளிக்கூடத்தில் மொபைல் போன்களை எடுத்துச்செல்ல அனுமதிக்கக்கூடாது.
  • இரவில் உங்கள் பிள்ளையின் படுக்கையறைகளில் மொபைல் போன்களை விட்டு விடாதீர்கள்.

                                               

Exit mobile version