வீட்டில் உள்ள குளிர்சாதனம் எப்படி இயங்குகிறது
குளிர்சாதனம்:
குளிர்சாதனமான வளிப்பதனம் அல்லது ஆங்கிலத்தில் Air Conditioner என்பது பூட்டப்பட்ட அல்லது திறந்த வெளியில் இருக்கும் காற்றில் உள்ள வெப்பம் மற்றும் ஈரப்பதத்தை உறுஞ்சி வெளியேற்றும் திறனுடைய மின்சாதானம் ஆகும்.
தத்துவம்:
இவை Vapour Compression Cycle. –ன் தத்துவத்தின் அடிப்படையில் இயங்குகிறது.
|
Vapour Compression Cycle |
1.ஒடுக்கச் சுருள் (Condensing Coil)
2.விரிவாக்க வால்வு (Expansion Valve)
3.ஆவியாக்கும் சுருள் (Evaporator Coil)
4.அமுக்கி (Compressor)
செயல்படும் விதம்:
குளிர் சாதனம் (AC) வீட்டின் உள்ளே உள்ள காற்றில் இருக்கும் வெப்பத்தையும் ஈரப்பதத்தையும் வெளியேற்றுவதால். வீட்டின் உள்ளே AC மூலம் செலுத்தப்படும் குளிர்ந்த காற்று வீட்டின் அறையை மேலும் குளிரச் செய்துவிடும்.
AC ஆனது இரண்டு அமைப்புகளைக் கொண்டுள்ளது, அவைகள் முறையே உள் அமைப்பு மற்றும் வெளியமைப்பு ஆகும்.
தெரியுமா?
1902 ஆம் ஆண்டு வில்லிஸ் கேரியார் என்பவரால் முதல் குளிசாதனம் அல்லது வளிப்பதனம் கண்டுபிடிக்கப்பட்டது.
உள் அமைப்பு:
- உள் அமைப்பில் வீட்டின் உள்ளே உள்ள சூடான காற்றை AC-யில் உள்ள காற்றாடி ஒன்று வெப்பமான காற்றை உறுஞ்சி ஆவியாக்கும் சுருள் (Evaporator Coil) வழியாக எடுத்துச்செல்லும்.
- அவ்வாறு எடுத்துச்செல்லும் காற்றை AC யில் உள்ள குளிர்விப்பான் குளிரச்செய்து சூடான காற்றை குளிர்ந்த காற்றாக மாற்றிவிடும்.
- சுருக்கமாக கூறவேண்டுமானால் AC யில் உள்ள குளிர்விப்பான் சூடான காற்றை உறுஞ்சி ஆவியாகிவிடும்.
வெளியமைப்பு:
- வெளியமைப்பில் காற்றாடி, கண்டென்சர் மற்றும் கம்ப்ரசர் என்ற மூன்று அமைப்பு உள்ளது இதில் குளிர்விபான் மூலம் உறிஞ்சப்பட்ட வெப்பமானது கண்டென்சர் வழியாக செல்லும்போது குளிர்ந்து மீண்டும் குளிர்விபான் திரவ நிலையை அடைந்துவிடுகிறது.
AC யில் உள்ள குளிர்விபான் பிரியான் ஆகும் இவைகள் பொதுவாக குளூரோ புளுரோ கார்பன் (CFC), ஹைட்ரோ குளூரோ புளுரோ கார்பன் (HCFC) மற்றும் ஹைட்ரோ புளுரோ கார்பன் (HFC) போன்றவைகள் குளிர்விப்பான்களாக பயன்பாட்டில் உள்ளன.
- கம்ப்ரசர் ஆனது குளிர்விபான் திரவம் அல்லது வாயு நிலையில் உள்ளபோது கண்டென்சரில் உள்ள குழாய்களின் வழியே செல்லத் தேவையான அழுத்தத்தை அளித்து ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல உதவுகிறது.
- காற்றாடி அல்லது மின்விசிரியானது கம்ப்ரசரில் இருந்து வரும் சூடான காற்றை குளிர்ந்த காற்றாக மாற்றி கண்டென்சருக்கு குளிர்ந்த காற்றை தரும் பணியை செய்கிறது.
நன்மைகள் :
- வேலையில் சௌகரியமான மனநிலையை ஏற்படுத்தும்.
- குறைந்த வெப்பம் மற்றும் குளிர்ந்த சூழ்நிலை பூச்சிகளை அண்டவிடாது.
- குறைந்த வியர்வை மட்டுமே வெளியேறுவதால் உடலில் நீர்சத்து குறைப்பாடு ஏற்படுவது குறைகிறது.
தீமைகள்:
- சூழலில் திடீர் மாற்றம் ஏற்படுவதால் காற்றில் உள்ள ஈரப்பதம் மற்றும் வெப்பம் சுவாச மண்டலத்தை பாதிக்கும் அபாயம் உள்ளது.
- தினசரி AC யை பயன்படுத்துவதால் தோல் வறட்சி ஏற்படும்.
- இவை தொடர்ந்து இயங்கும் போது இதனால் ஏற்படும் இரைச்சல் ஒலி மாசுபாடு மட்டுமல்லாமல் செவியில் சில பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.
- சில பூஞ்சை தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
- இவை கண்களில் லென்சு அணிபவர்களுக்கு சில கண் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. (கண்களில் உள்ள ஈரப்பதத்தை இழந்துவிடுவதால் லென்சு வெளியேறிவிடும் ஆபத்து உள்ளது.)
- வெகு நேரம் குளிர்ந்த சூழலில் இருக்கும் போது உடலில் திடீர் வெப்ப மாற்றம் உடலில் நோய்களை ஏற்படுத்தும்.
பாதுகாப்பு முறைகள் :
- தயாரிப்பு நிறுவனத்தின் ஆலோசனைப்படி அடிக்கடி காற்றை சுத்தம் செய்யும் வடிக்கட்டிய மாற்ற வேண்டும்.
- அவ்வப்போது கதவை திறந்து வைத்து சுத்தமான காற்றை வர வைத்தால் காற்று மாசுபாடு குறையும்.
- 10 வருடத்திற்கு ஒரு முறை AC யை மாற்ற வேண்டும்.
- கார்களில் உள்ள AC யின் காற்று வடிகட்டியை 12,000 முதல் 15,000 மைல்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.