வீட்டில் கொசுக்கள் நுழைவதை தடுக்கும் செடிகள்
1.நொச்சி
2.சாமந்தி
3.தைல மரம்
4.வெள்ளைப்பூண்டு
5.வேம்பு
கொசுக்கள்:
கொசுக்களை அழிக்க இன்று நாம் பயன்படுத்தும் எந்த ஒரு பொருளும் கொசுக்களை அழிப்பதில்லை மாறாக அதனை விரட்ட மட்டுமே செய்வதால் அதன் பெருக்கம் தற்போது 76% அளவிற்கு அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இதோ! இரவில் தூங்கும்போது ஏன் செல்போன்களை அருகில் வைக்கக்கூடாது என்பதற்கான காரணம்
மேலும் இன்று நாம் பயன்படுத்தும் விரட்டிகளால் பல நன்மை தரும் பூச்சியினகளும் பாதிகப்படுகிறது. ஏன் மனிதர்களில் கூட இதன் பாதிப்பு தற்போது அதிகரித்துள்ளது. எனவே இவற்றையெல்லாம் விடுத்தது நம் வீட்டில் பயன்படுத்தும் அன்றாட தாவரங்களின் உதவியால் நம் வீட்டை விட்டு எப்படி கொசுவை அகற்றுவது என்பதை காண்போம்.
நொச்சி இலைகள் :
![]() |
நொச்சி |
நொச்சி இலை மிகச்சிறந்த கொசு விரட்டியாகும், நொச்சி இலைகளை நன்றாக உலர்த்திக் கொண்டு பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள் அந்தப் பொடியை மாலை வேலையில் சிறிது நெருப்பு துண்டுகளின் மேல் போட்டு வரும் புகையை சாம்பிராணி போல் வீட்டின் மூலை முடுக்குகள் எல்லாம் காண்பியுங்கள் கொசுக்கள் அந்த வாடைக்கு அருகில் கூட நெருங்காது.
ஆரேஸ்பதி (அ) தைல மர இலைகள் :
![]() |
தைல மரம் |
நம் வீட்டு தோட்டத்தில் ஒரு மரமாவது இதனை கண்டிப்பாக வையுங்கள் இதனால் நமக்கு பயன் மிகவும் அதிகம் உடல் வலி ஏற்ப்பட்டால் அல்லது உடல் நிலை சரி இல்லாத போது இதன் இலைகளை சுடு நீரில் போட்டு கொதிக்கவைத்து குளித்தால் உடல் வலி போகும் காய்ச்சல், தலைவலி குறையும். மேலும் இதன் இலைகளை மாலையில் நெருப்பு வைத்து புகை வரும்படி செய்தால் கொசுக்கள் வீட்டில் அண்டாது.
பெரியவர்கள் ஊஞ்சலில் உறங்கினால் ஏற்படும் விளைவுகள் என்ன?
வெள்ளை பூண்டு :
![]() |
பூண்டு |
வெள்ளை பூண்டு எண்ணெய்யுடன் அதாவது (ஐந்து பங்கு எண்ணெய்யுடன் ஒரு பங்கு நீர்) கலந்து ஒரு துணியில் நனைத்து வீட்டின் சன்னல் மற்றும் வாசலில் கட்டி தொங்க விடுங்கள் கொசுக்களுக்கு இது அரிப்பு உணர்ச்சியை தூண்டும் அதனால் வீட்டுனுள் வராது.
வேம்பு:
![]() |
வேம்பு |
வேப்பம் மரத்தின் இலைகளையும் நொச்சி இலைபோல் பொடி செய்து நெருப்பில் போட்டால் வரும் புகையை வீட்டின் உள்ளே செல்லும் படி வைத்தால் எந்த பூச்சியும் வீட்டினுள் வராது.
குளியல் இப்படிதான் செய்யவேண்டும் என்று சிறுவர்களுக்கு பெரியவர்கள் உரைக்கும் காரணமும் அதன் அறிவியலும்
சாமந்தி:
![]() |
சாமந்தி |
நம் கிராமங்களில் வீடு தோறும் இந்த சாமந்தி செடி இருந்த காலமுண்டு ஆனால் தற்போது இதனை பெரும்பாலான இடங்களில் வளர்பதில்லை, இந்த பூவின் சாறு பல நோய்களுக்கு அருமருந்தாக உள்ளது, இதன் வாடை தான் கொசுக்களை விரட்டி திறன் வாய்ந்தது, இந்த செடியை நம் வீட்டின் உள்ளே கூட சூரிய ஒளி படும் படி வைத்துவிட்டால் நன்றாக வளரும்.
மேலும் எஜ்ரேடம், புதினா, சிற்றோநெல்லா, போன்ற சில செடி வகைகளும் கொசுக்களை விரட்டும் தன்மை கொண்டவையாக உள்ளன இருபினும் மேலே கொடுக்கப்பட்டுள்ள செடிகள் நம் வீட்டின் அருகில் எளிதாக கிடைப்பவை அளித்துள்ளோம்.
கீழுள்ள படத்தில் நோய்களின் அட்டவணை அளித்துள்ளோம் அதன் படி உங்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.
- வயிற்றில் முட்டையுடன் 110 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்த சிட்டுக்குருவி வகை பறவை இனம் கண்டுபிடிப்பு
- சம்மணமிட்டு அமர்பவர்களுக்கு ஆயுள் அதிகம் ஆராய்சி முடிவுகள் வெளியீடு !
- உணவகங்களில் அசைவ உணவுடன் எலுமிச்சை துண்டு வைக்க காரணம் என்ன | SciTamil
- புகைப்பதை நிறுத்துவதால் உடலில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் மற்றும் நன்மைகள் | SciTamil