3 பின் உள்ள பிளக்குகள் பொதுவாக உயிர் காக்கும் அரணாக செயல்படும் கருவியாகும். மூன்று பின் உள்ள பிளக்குகளில் நடுவில் உள்ள பின் மட்டும் மிகவும் நீளமானதாகவும் தடிமனாகவும் காணப்படும்.
இதுவரை நீங்கள் அதைப் பார்த்தது இல்லை என்றால் கீழே அதன் படம் உள்ளது பாருங்கள் அதன் நடுவில் உள்ள பின் மட்டும் நீளமாகவும் தடிமனாகவும் இருக்கும்.
பொதுவாக இந்தியாவில் தான் இந்த மூன்று பின் உருளையாக காணப்படும். அமெரிக்காவில் மூன்று பின்களுக்கு பதில் இரண்டு சதுர வடிவ பின் இருக்கும். துபாயில் இந்த மூன்று பின்களும் செவ்வக வடிவில் இருக்கும்.
3 பின் ப்ளக்
மூன்று பின்கள் எதற்கு?
இடது புறம் உள்ள பின் நடுநிலையான ( Neautral current) மின்சாரத்திற்கு.
நடுநிலையான மின்சாரத்தை இந்த பின்னில் தான் தரவேண்டும் அப்பொழுதுதான் மின்சாரம் பாயும்போது நாம் உபயோகிக்கும் உபகரணங்களில் மின்சாரம் பாயும் ஒரு சுற்று உருவாகி உபகரணம் இயங்க ஆரம்பிக்கும்.
வலதுப்புறம் உள்ளது தான் மின்சாரம் உள்ள பின்களுக்கு.
மின்சாரம் இந்த பின் வழியாக தான் நாம் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு செல்லும் பாதை.
நடுவில் உள்ள பெரிய பின் பூமிக்கு
நாம் பயன்படுத்தும் உபகரணம் ஒரு உலோகத்தால் ஆன பாதுகாப்பு பெட்டகத்தை கொண்டிருந்தால் அதனுடன் இந்த பூமியை இணைக்கும் பின்னுடன் இணைக்கவேண்டும் அப்போது தான் ஏதாவது மின் கசிவு ஏற்பட்டால் அது நம்மை பாதிக்காமல் பூமியை சென்றடைந்து விடும்.
எந்த வண்ணம் எதற்கு?
பொதுவாக பூமியை இணைக்கும் வயர் பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் தான் பயன்படுத்த வேண்டும்.
நடுநிலையான மின்சார வயர்கு நீளம் நிறம்
மின்சாரம் (live wire) வயர்கு காப்பி / பொடி நிறமும் பயன்படுத்தவேண்டும்.
3 பின் பிளக்கில் நடுவில் உள்ள பின் மட்டும் ஏன் பெரியதாகவும் தடிமனாவும் உள்ளது என்று தெரியுமா?
நடுவில் உள்ள பின்தான் நாம் சாக்கெட்டில் செருகும் போது முதலில் படும் பின் ஆகும். அதன் பிறகுதான் மற்ற இரண்டு பின்களும் படும்.
இதன் காரணம் நாம் பிளக்கை பிடுங்கும் போது ஏற்படும் மின்மாற்றதால் நாம் உபயோகிக்கும் உபகரணங்களில் எவ்விதமான பாதிப்பும் (short circuit) ஏற்படாமல் பாதுகாக்கிறது.
சக்கெட்டில் பொதுவாக ஒரு லாக் இருக்கும் அது நம் வீட்டில் உள்ள குழந்தைகள் எதையாவது உள்ளே விட்டால் பாதிப்பு ஏற்பட கூடாது என்று வைத்திருப்பார்கள். இந்த லாக் திறக்க நடுவில் உள்ள பெரிய பின்னல் மட்டுமே இயலும்.
அதிக தடிமனாக உள்ளதன் காரணமாக அதில் மின்தடை அதிகமாக இருக்கும் இதனால் எதாவது பிரச்சனை ஏற்பட்டால் மின்சாரம் நம்மை தாக்குவதிற்கு முன் அது பூமியை சென்றடைந்துவிடும்.
Also Read:
- ChatGPT, DeepSeek மற்றும் செயற்கை நுண்ணறிவுப் போட்டி: முழுமையான அலசல்!
- இரும்பு யுகம்: 5300 ஆண்டுகள் பழமையான இரும்பு கண்டுபிடிப்பு – தமிழக வரலாறு | Iron Age Tamil Nadu
- எது சிறந்தது: சாதாரண டயர்கள் vs டூப்லெஸ் டயர்கள் ?
- சர்க்கரை நோயாளிகளுக்கு அரிசி Vs சப்பாத்தி: எது சிறந்தது?
- ஆண்களின் மன அழுத்த அனுபவங்கள்: இந்தியாவின் சிறப்புப் பார்வை