தேயிலை இலைகளை குறைந்த ஆக்ஸினேற்ற செயல்முறைக்கு உட்படுத்தப்படுத்தப் படுவதால் இலைகளின் இயற்கையான பண்புகள் தக்க வைக்கப்படுகிறது.
க்ரீன் டீ இலைகளில் எபிகல்லோகாடெசின் கேலேட் (ஈ.ஜி.சி.ஜி) என்ற பண்பு உள்ளது. இது நம் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து எடை இழப்புக்கு உதவுகிறது
க்ரீன் டீ குடித்து வரும்போது உங்களின் உடற்பயிற்சி செயல்திறன் அதிகமாகவும், இது கொழுப்பை நன்றாக எரிக்கவும் உதவும்.
கிரீன் டீயில் உள்ள கேடசின்கள் தீங்கு விளைவிக்கும் உள்ளுறுப்பு கொழுப்பின் சதவீதத்தை கணிசமாகக் குறைக்கின்றன என்று ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளது.
நீங்கள் உடல் எடையை குறைக்க ஒரு நாளைக்கு ஒரு கப் க்ரீன் டீ என டயட்டை தொடங்க வேண்டும். பிறகு மதிய மற்றும் மாலை நேரங்களில் க்ரீன் டீயை நீங்கள் எடுத்து வரலாம்.
க்ரீன் டீயை அதிகமாக குடிப்பது உங்களுக்கு தலைவலி, குமட்டல், வாந்தி (அரிதாக), வயிற்றுப்போக்கு நெஞ்செரிச்சல் மற்றும் தலைச்சுற்றலை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
கிரீன் டீ கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்சினைகளை உண்டாக்க வல்லது. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை இந்த க்ரீன் டீயை தவிர்க்கலாம்.
காலை சாப்பாட்டுக்கு பிறகு காலை 9 மணி முதல் 10 மணி வரை, பகல் வேளைகளில் உணவுக்கு இடையிலும், இரவில் உணவிற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பும் எடுத்துக் கொள்ளலாம்.
க்ரீன் டீ குடிக்க சரியான நேரம் ?
க்ரீன் டீயில் இருக்கும் டானின்கள் காரணமாக வெறும் வயிற்றில் குடிப்பது வயிற்று அமிலத்தை அதிகரிக்கும். எனவே வெறும் வயிற்றில் க்ரீன் டீயை எடுத்துக் கொள்ள வேண்டாம்.