ஆர்டிக்கில் பிளாஸ்டிக் நுண் துகள்கள்
ஆர்டிக் பகுதிகளில் கூட அதிகளவில் பிளாஸ்டிக் நுண் துகள்கள் பனியுடன் கலந்து பொழிவதை அறிவியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆய்வாளர்கள் கூறுகையில் ஒரு லிட்டர் பனியில் 10,000 க்கும் அதிகமான பிளாஸ்டிக் நுண் துகள்களை கண்டறிந்ததாக தெரிவிக்கின்றனர்.
மனிதர்கள் வாழாத பகுதியில் இவ்வளவு பிளாஸ்டிக் நுண் துகள்கள் இருக்கும்போது நாம் இருக்கும் இடங்களில் எவ்வளவு நிறைந்திருக்கும் என்று எண்ணி பாருங்கள்.
தற்போது நாம் குடிக்கும் குடி நீரில் கூட பிளாஸ்டிக் நுண் துகள்களின் அளவு கணிசமாக அதிகரிதுள்ளது. ஆனால் இதுவரையில் இந்த நுண் பிளாஸ்டிக் துகள்களால் மனிதர்களுக்கு எந்தவிதமான பாதிப்பு ஏற்ப்படுகிறது என்பதை எந்த ஆய்வும் நிரூபிக்கப்படவில்லை என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒரு ஜெர்மானிய-சுவிஸ் ஆய்வாளர்கள் குழு இந்த ஆய்வினைப் பற்றிய ஒரு கட்டூரையை வெளியிட்டுள்ளனர்.
எப்படி இந்த ஆய்வினை மேற்கொண்டனர்?
முதலில் ஆய்வாளர்கள் ஆய்வுக்கு தேவையான பனியினை ஷிவல்பர்ட் என்ற தீவில் ஒரு பிளாஸ்க் முழுவதும் எடுத்துக்கொண்டனர்.
இதனை ஜெர்மனியில் உள்ள ஆல்ஃபிரட் வெக்னர் பல்கலைக்கழகத்தில் வைத்து ஆய்வினை மேற்கொண்டபோது ஆய்வாளர்கள் எண்ணியைதை விட பலமடங்கு பிளாஸ்டிக் நுண் துகள்கள் இருப்பதை கண்டறிந்தனர்.
இதில் கண்டுபிடிக்கப்பட்ட பெரும்பாலான நுண் துகள்கள் விலங்குகளின் ரோமங்களும் தாவரங்களின் ஸ்டிராசும் அதிகளவில் காணப்பட்டன மேலும் இதனுடன் டயர், பெயிண்ட், ரப்பர் மற்றும் செயற்கை இழைகள் அதிகளவில் இருந்ததை கண்டறிந்துள்ளார்.
மேலும் இதில் கொடுமை என்னவென்றால் ஆர்டிக் பகுதியில் கண்டறிந்ததை விட பல மடங்கு ஜெர்மனி, சுவட்சர்லாந்து மற்றும் உலகின் பல பகுதிகளில் பிளாஸ்டிக் நுண் துகள்கள் காணப்பட்டுள்ளது.
எப்படி இது ஆர்டிக் பகுதியை அடைந்தது?
ஆய்வாளர்கள் இந்த பிளாஸ்டிக் நுண் துகள்கள் பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரிக்கும்போது ஏற்படும் புகையின் மூலம் வளிமண்டலத்தை அடைந்து பின் அங்கிருந்து காற்றின் மாறுபட்ட சுழற்சியின் மூலம் இங்கு வந்திருக்கலாம் என்று கருதுகின்றனர்.
மற்றுமொரு கட்டூரை இந்த பிளாஸ்டிக் நுண் துகள்கள் உலகின் பலப் பகுதிகளில் கண்டறிந்ததை தெளிவுப்படுத்துகிறது.
இதனால் என்ன ஆபத்து?
கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது மேலும் அதிகளவு பிளாஸ்டிக் நுண் துகள்களின் அளவு அதிகரிதுள்ளது. மேலும் கடல்நீர் இங்குள்ள பல பிளாஸ்டிக் குப்பைகளை மெதுவாக ஆர்டிக் பகுதியில் கொண்டு சேர்த்துக்கொண்டு இருப்பதால் அதன் தன்மையை இழக்கும் நிலையில் ஆர்டிக் உள்ளது.