நீங்கள் எப்போதாவது பெட்ரோல் என்ஜினை கூர்ந்து கவனித்திருந்தால் இது தெரியும். அதாவது பெட்ரோல் என்ஜின் இயங்கும்போது மிகவும் குறைந்த அளவு மட்டுமே அதிர்வுகளும் சத்தமும் வெளியேறும்.
ஒரு இன்ஜினியராக இருந்தால் இது ஏன் என்று உங்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.
பெட்ரோல் என்ஜினில் கம்பஸ்டன் நடைபெறுவதற்கு முன் காற்றையும் பெட்ரோலையும் ஒன்றாக கலந்து ஒரு சரியான கலவையாக வருவதால் எளிதில் கம்பாஸ்டன் நடக்கிறது இதனால் எவ்விதமான இரைச்சல் மற்றும் அதிர்வுகளும் வெளியேறுவதில்லை.
ஆனால் டீசல் என்ஜினில் கம்பாஸ்டன் நடைபெற எவ்விதமான ஸ்பார்க் பிளக்குகளும் இல்லாததால் கம்பாஸ்டன் சிலிண்டரின் எந்த நிலையில் வேண்டுமானாலும் நடைபெற்று ஒரு சீரற்ற தொடர்வினையை ஏற்ப்படுத்துகிறது.
இந்த மாதிரியான ஒரு நிலையில் தேவையற்ற இரைச்சல் மற்றும் அதிர்வுகளைக் கட்டுப்படுத்த ஒரு முரடான அமைப்பு தேவையாக உள்ளது.
உண்மையில் பெட்ரோல் இன்ஜினை விட அதே அளவுள்ள டீசல் எஞ்சின் அதிக எடையுடனும் அதிக சக்தி வாய்ந்ததாகவும் காணப்படும்.
கம்பாஸ்டன் நடைபெறும்போது பெட்ரோல் என்ஜினை விட டீசல் என்ஜினில் அதிக சக்தி வெளியேறும். அதாவது பெட்ரோல் என்ஜினை விட டீசல் என்ஜினில் இரண்டு மடங்கு அதிக சக்தி வெளியேறும்.
இதனால் அதிக வெப்பம் மற்றும் ஆற்றலை சமாளிக்க அதன் உள்ளே பொருத்தப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் அதிக தடிமனாக செய்யவேண்டி இருக்கும் இதுவே அதிக எடைக்கு காரணமாக அமைந்துவிடுகிறது.மேலும் இதில் உள்ள அதிர்வுகளை கட்டுப்படுத்தவே Fly Wheel அமைப்பு பொருத்தப்பட்டிருக்கும்.
இதனால் அதிக வெப்பம் மற்றும் ஆற்றலை சமாளிக்க அதன் உள்ளே பொருத்தப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் அதிக தடிமனாக செய்யவேண்டி இருக்கும் இதுவே அதிக எடைக்கு காரணமாக அமைந்துவிடுகிறது.மேலும் இதில் உள்ள அதிர்வுகளை கட்டுப்படுத்தவே Fly Wheel அமைப்பு பொருத்தப்பட்டிருக்கும்.
தெரியுமா?
பெட்ரோல் என்ஜினை குறைந்த ஆற்றல் காரணமாக அதிக பளுவான வாகனகளுக்குப் பயன்படுத்த இயலாது.இதனால் தான் இரு சக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் என்ஜினைப் பயன்படுத்துகின்றோம்