கொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்

gova pre

கொய்யா பழம் என்பது கைக்கு எட்டும் தூரத்தில் கிடைக்கும் ஒரு பழமே ஆகும். இந்த பழத்தால் யார் பயனடைகிறார்களோ… இல்லையோ… கண்டிப்பாக கர்ப்பிணி பெண்கள் மிகவும் பயனைடைகிறார்கள். அப்படி என்ன தான் கர்ப்பிணி பெண்களுக்கு இந்த கொய்யா பழம் தந்துவிடுகிறது? வாருங்கள் பார்க்கலாம்.
                              imunity

1. எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்:

இந்த கொய்யா பழத்தில் வைட்டமின் சி அதிகளவில் இருக்கிறது. அதனால், கர்ப்பிணிகளின் எதிர்ப்பு சக்தி என்பதை இந்த கொய்யா தருகிறது. வளர்சிதை மாற்றம் அதிகரிக்க, இதனால் பல நோய்களிலிருந்து உங்களை இந்த கொய்யா பழம் காப்பாற்றுகிறது.

2. இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்தும்:

கர்ப்பிணி பெண்கள் இரத்த அழுத்த விஷயத்தில் கவனத்துடன் இருத்தல் மிகவும் வேண்டிய ஒன்றாக அமைகிறது. கொய்யா பழம், இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க, இதனால் கருச்சிதைவு, குறை பிரசவம் முதலியவை தவிர்க்கப்படுகிறது.
                                         SUGAR

3.இரத்த சர்க்கரையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளும்:

கர்ப்பிணிகளுக்கு, கர்ப்ப நீரிழிவு என்பது வழக்கமாக உண்டாகக்கூடியது தான். குறிப்பாக உங்களுடைய 24ஆம் வாரத்தில். இதனால், இரத்த சர்க்கரை நீரிழிவு என்பது ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதை தவிர்க்க, கொய்யா சாப்பிடலாம்.
stomach ache

4. மலச்சிக்கல் மற்றும் மூல நோய் வராமல் தடுக்கும்:

கர்ப்பிணிகளுக்கு ஹார்மோன்கள் குறைவாக சுரக்க, இதனால் மலச்சிக்கல் அல்லது மூல நோய் ஏற்படலாம். கொய்யா பழத்தில் பெரிதளவில் நார்சத்து இருப்பதால்… இந்த நிலையில் உங்களை காக்க பயன்படுகிறது.
nofood

5. செரிமானத்திற்கு வழிவகை செய்யும்:

நீங்கள் சாப்பிடும் ஆரோக்கியமான உணவை செரிமான மண்டலத்திற்குள் சரியான நேரத்தில் அனுப்ப கொய்யா உதவுகிறது. மேலும், நெஞ்செரிச்சல், குமட்டல் போன்ற பிரச்சனைக்கும் கொய்யா சிறந்த தாக அமைகிறது.

6. கேன்சர் வராமல் தடுக்கும்:

கர்ப்பிணிகளுக்கு கேன்சர் வருவது அரிது. இருப்பினும், வரும்முன் காப்பதே நலம் என்பதால், ஆக்ஸிஜனேற்ற பன்புக்கொண்ட கொய்யாவை சாப்பிடுவது நல்லது. இந்த கொய்யா பழத்தில் லைக்கோபீன் மற்றும் வைட்டமின் சி யும் இருப்பதால்… உங்கள் உடலில் இருக்கும் நச்சை வெளியேற்ற கொய்யா உதவுகிறது.
sn1

7. கண் பிரச்சனையை போக்கும்:

கொய்யா பழத்தில் வைட்டமின் ஏ இருப்பதால், உங்களுக்கும், கருவில் இருக்கும் உங்கள் குழந்தைக்குமான கண் குறைப்பாட்டை போக்க கொய்யா உதவுகிறது.
slowlearner

mild traumatic brain injury

8. குழந்தையின் நரம்பு பிரச்சனையை போக்க:

கொய்யா பழத்தில் போலிக் அமிலமும், வைட்டமின் பி9ம் இருக்கிறது. இதனால், உங்கள் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை சரியான முறையில் செயல்படுத்த செய்கிறது.

9. கிருமிகள் மற்றும் தொற்றுநோயை தூர விரட்டும்:

கொய்யா பழத்தில் வைட்டமின் சி, ஈ, கரோட்டினாய்ட், ஐசோ பிளேவனாய்ட், பாலிபீனால் என ஆக்சிஜனேற்ற பண்பு கொண்ட தன்மைகள் இருக்கிறது. இதனால், கிருமிகள் மற்றும் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு என்பது மிக குறைவாக அமைகிறது.
A Brief History of Yoga

10. மன அமைதிக்கு:

கர்ப்பிணிகள் கொள்ளும் மன அழுத்தத்தினால் கார்டிசோல் வெளியேறுகிறது. இதனால் உங்கள் உடல் நிலைமை மோசமாகக்கூடும். இந்த கொய்யா பழத்தில் மெக்னீசியம் பெருமளவில் இருப்பதால், உங்கள் தசை மற்றும் நரம்பினை சமநிலையில் வைத்துக்கொள்கிறது. இதனால், உங்களுடைய மன அழுத்தம் படிப்படியாக குறையவும் செய்கிறது.

11. இரத்த கொழுப்பை குறைக்கும்:

கொய்யாவில் இருக்கும் நார்சத்து இதயத்துக்கு நல்லது. இதனால், உங்கள் இரத்த கொழுப்பு கட்டுப்பாட்டிற்குள் இருக்கக்கூடும். ஒருவேளை இரத்த கொழுப்பு கட்டுப்பாட்டில் இல்லையென்றால், இதய சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உங்களுக்கு வரலாம்.
tideness

12. இரத்த சோகையை குணப்படுத்தும்:

கர்ப்பிணிகளுக்கு இரும்பு சத்து என்பது அவசியம். இந்த கொய்யா பழத்தில் தேவையான அளவிற்கு இரும்பு சத்து இருப்பதால், கர்ப்பிணிகள் கொய்யா பழம் சாப்பிட்டு வரலாம்.

13. கால்சியம் கொண்ட கொய்யா:

கொய்யா பழத்தில் கால்சியம் இருப்பதால், உங்கள் உணவு முறையில் கொய்யாவை சேர்த்துக்கொள்வது நல்லது.
09 early reading habits ask prediction questions

14. காலை சுகவீனம் நீங்கும்:

கொய்யா பழத்தில் வைட்டமின் சி இருப்பதால், காலை சுகவீனம் நீங்கும். உங்களுக்கு குமட்டல் எடுக்கும்போது, கொய்யாவை ஒரு கடி கடிக்கலாம். அதேபோல், விதை நீக்கி மோருடன் கலந்து சாப்பிட, வயிறு பிரச்சனை நீங்க, வாந்தியும் கட்டுப்பாட்டில் இருக்கும்.
Read also:

Share This Article
Leave a Comment