#Hybrid Solar Cells
சூரிய மின்னாற்றல்
சூரிய மின்னாற்றல் (solar power) என்பது சூரிய ஒளியில் இருந்து மின்னாற்றலைப் பெறுவதாகும். இது நேரடியாக ஒளிமின்னழுத்திகளின் செயல்பாட்டின் முறையிலும் மறைமுகமாகச் செறிவூட்டும் அல்லது செறிவான சூரிய ஆற்றல் (CSP) முறையிலும் பெறப்படுகிறது.
செறிவூட்டல் முறையில் பரந்த அளவு சூரிய ஒளிக்கற்றைகள் வில்லைகள், மற்றும் கண்ணாடிகளைக் கொண்டு சிறிய ஒளிக்கற்றையாகக் குவிக்கப்பட்டு அதன் மூலம் நீரை ஆவியாக்க வைத்து மின்சாரம் பெறப்படுகிறது. ஒளிமின்னழுத்தி முறையில், ஒளிமின் விளைவைப் பயன்படுத்திச் சூரிய ஒளி நேரடியாக மின்னோட்டமாக மாற்றப்படுகிறது.
Triboelectric nanogenerators (TENGs) ஆனது இருபொருட்கள் உரசும்போது ஏற்படும் மின்னூட்டம் மூலம் மின்னோட்டத்தை உற்பத்தி செய்கிறது. மேலும் இதனை உடைகள், கார் சக்கரங்கள், மாடிகள் அல்லது தொடு திரைகள் மூலம் இயக்கம் அல்லது அதிர்வுகளைத் தூண்டுவதில் இறுதி நடைமுறை பயன்பாடுகளைக் காணலாம்.
இதனைப்போலவே ஆராய்ச்சியாளர்கள் மழைநீர், சூரிய மின் செல் மீது பட்டு உருண்டோடும் போது ஏற்படும் அதிர்வுகள் மற்றும் சமிக்கைகளை கொண்டு மின்னுற்பத்தி செய்து வெற்றிகண்டுள்ளனர்.
(TENGs யில் இரண்டு பாலிமர் அடுக்குகள் கொண்டு தயாரித்து உள்ளனர் அவற்றில் முதல் அடுக்கில் உள்ள பாலிமர் polydimethylsiloxane (PDMS) ஆலும் இரண்டாம் அடுக்கில் உள்ள பாலிமர் poly(3,4-ethylenedioxythiophene):poly(styrenesulfonate) (PEDOT:PSS). என்ற பாலிமாராலும் செய்யப்பட்டு DVD களில் உள்ளது போல அடுக்கி வைகப்படுள்ளது.
முதலில் அடுக்கி வைக்கப்பட பாலிமர் மழை நீர் மேல் பட்டதும் இரண்டாவதாக அடுக்கி வைகப்படுள்ள பாலிமருடன் இணைந்து ஒரு எலக்ட்ரோடு (electrode) மாதிரி செயல்ப்பட்டு மின்னுற்பத்தி செய்யப்படுகிறது.
மூலம்: அமெரிக்கன் கெமிகல் சொசைட்டி