அமேசான் நிறுவனம்:

அமேசான்  நிறுவனம் (Amazon Inc) அமெரிக்காவின் பன்னாட்டு இணைய வணிக நிறுவனமாகும். முதலில் இணைய புத்தக அங்காடியாக (Kindle) தொடரப்பட்ட இது தற்போது அனைத்து துறைகளிலும் தனது கால்களைப் பதித்துவருகிறது. அதன்படி தற்போது விண்வெளி துறையிலும் நுழைந்துள்ளது அமேசான் நிறுவனம்.
தலைமை செயல் அதிகாரி ஜெஃப் பேசாஸ் (Jeff Bezos)

செயற்கைகோள்:

உலகில் தற்போது இணைய சேவை என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகவே மாறிவிட்டது, இருப்பினும் இன்றும் பல பகுதிகளில் இணைய சேவை என்பது ஒரு புதிய வார்த்தையாகவே பார்க்கப்படுகிறது. 
குய்பர் திட்டம் (Kuiper)
இந்த குறைகளைப் போக்குவதற்காக அமேசானின் பல நாள் குறிக்கோளான இணைய செயற்க்கைக்கோள் திட்டமான “குய்பர் (Kuiper)” – யை  நடைமுறைப்படுத்த உள்ளது.

Must Read: அண்டார்டிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகவும் பெரிய சிலந்தி

அமேசானின் இந்த திட்டதில் மூன்று வகையாக புவியின் சுற்று வட்டப் பாதைக்கு ஏற்ப செயற்க்கைகோள்கள் பிரித்து வைக்கப்பட்டுள்ளன, அவைகள் முறையே 
  • 784 செயற்க்கைகோள்கள் 367 மைல்களிலும், 
  • 1296 செயற்க்கைகோள்கள் 379 மைல்களிலும், 
  • 1157 செயற்க்கைகோள்கள் 391 மைல்களிலும் நிலை நிறுத்தப்பட உள்ளன. 

இவை புவியை 95 சதவீதம் வரை பரவி இணைய சேவையை வழங்கும்.

ஆனால் இன்று வரை அமேசான் நிறுவனம் இத்தனை செயற்கைக் கோள்களையும் சொந்த முயற்சியில் உற்பத்தி செய்யப்போகிறாத அல்லது மூன்றாம் நபர்கள் மூலம் அதை தயாரிக்கப் போகிறதா என்ற விபரம் வெளியாகவில்லை. ஆனால் அனைத்து செயற்க்கை கோள்களும் தனது சொந்த நிறுவனமான புளு ஆர்ஜின் (Blue Orgin) மூலம் தான் விண்ணில் ஏவப்படும் என்றும் கருதப்படுகிறது.
புளு ஆர்ஜின் (Blue Orgin)
Must Read: 
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பகிர!

What is your reaction?

0
Excited
0
Happy
0
In Love

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in Engineering

You may also like