தீயணைப்பான் உள்ளே என்ன இருக்கிறது என்று தெரியுமா?

fir

தீயணைப்பான்

தீயணைப்பான் (Fire Extinguisher) என்பது குடியிருப்பு கட்டிடங்கள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றில் ஏற்படும் சிறிய அல்லது கட்டுப்படுத்தக்கூடிய தீப்பற்றல், பரவல்களை தடுத்து தீ அணைக்க உதவும் ஒரு கருவி ஆகும். 
வண்டிகளில் பயன்படும் சிறிய ரக 500 கிராம் தீயணைப்பான்கள் முதல் பெரிய தொழிற்சாலைகளில் பயன்படும் 14 கிலோ தீயணைப்பான்கள் வரை இன்று பல அளவுகளில் தீயணைப்பான்கள் கிடைக்கப்பெறுகின்றன.

இவை பொதுவாக இரண்டு முறைகளில் தயாரிக்கப்படுகின்றன.

அழுத்தம் கொடுக்கப்பட்ட தீயணைப்பான். 

  • இவ்வகை தீயணைப்பான்களில் நீர், வளிமம் (வாயு) போன்ற அடிப்படை தீயணைப்புக் காரணிகள் அதிக அழுத்தத்தில் அடைக்கப்பட்டு இருக்கும்.

அழுத்தம் உண்டாக்கவல்ல தீயணைப்பான்.

  • இவ்வகை தீயணைப்பான்களில் அடிப்படை தீயணைப்பு காரணிகளாக வேதிப்பொருள்கள் ஒரே உருளையின் இருவேறு கண்ணாடி குடுவைக்குள் வைக்கப்படுகின்றன.
  • இந்த வகை தீயணைப்பான்களின் தலை தாக்கப்படும்பொழுது இந்த கண்ணாடி குடுவை உடைந்து, இரண்டு வேதிப்பொருள்களும் ஒன்று சேர்கின்றன.
  • இதனால் ஏற்படும் வேதிவினையால் உருவாகும் புதிய வேதிப்பொருள் அதிக அழுத்தத்தில் விரைந்து வெளியேறி நெருப்பை அணைக்கிறது.

வேலைசெய்யும் முறை

பொதுவாக தீயணைப்பான்கள் நெருப்பு முக்கோண அடிப்படையில் இயங்குகின்றன. அதாவது ஓர் இடத்தில் தீ உருவாக அல்லது பரவ வெப்பம், எரிபொருள் மற்றும் ஆக்சிசன் ஆகிய மூன்றும் முக்கிய காரணிகளாக உள்ளன. எனவே இவை மூன்றில் ஏதாவது ஒன்றை நீக்கும்பொழுது நெருப்பு அணைக்கப்படுகின்றது. இதன் அடிப்படையில் குளிர்வித்தல், போர்த்துதல் ஆகிய முறைகளில் தீ அணைக்கப்படுகின்றது.

குளிர்வித்தல்

இந்த முறையில் தீப்பிடித்த பகுதிகளில் நீர் போன்ற குளிர்விப்பான்கள் அதிக அழுத்தத்தில் செலுத்தப்படுகின்றன. இதனால் வெப்பம் நீக்கப்படுவதால் தீ கட்டுப்படுத்தப்படுகின்றது.
கைபிடியில் உள்ள வளையத்தை நாம் எடுக்கும்போது அது மிகவும் விரைவாக உருளையின் உள்ளே வைகப்படுள்ள வாயு குடுவையில் மீது அதித வேகத்தில் படுவதால் குடுவை உடைந்து அதில் உள்ள வாயு வெளியேறி  உள்ளே வைக்கப்பட்டுள்ள நீரை அதிக அழுத்தத்துடன் வெளியே தள்ளி தீயின் மீது நீரை பீச்சியடித்து தீயை கட்டுப்படுதிறது.

மேற்கண்ட படத்தில் 

  • 1. வளையம் 
  • 2. வாயு குடுவை
  • 3. நீர்/நுரை/வேதிப்பொருள் 
  • 4. நீர் வெளியேறும் பாதை 
  • 5. திறப்பு 
  • 6. வளையம் எடுக்கப்படுகிறது 
  • 7. அழுத்தம் குடுவையை தாக்கிறது 
  • 8. வாயு குடுவையை விட்டு வெளியேறுகிறது
  • 9. அதிக அழுததால் வாயு/நுரை/வேதிப்பொருள் நீரை வெளியே தள்ளுகிறது .
  • 10. வெளியேறும் நீர்/வாயு/வேதிப்பொருள் 
  • போர்த்துதல்

    இந்த முறையில் தீப்பிடித்த பொருள்களில் சில வேதிப்பொருட்கள் அதிக அழுத்தத்தில் செலுத்தப்படுகின்றன. இதனால் ஏற்படும் நுரை தீப்பிடித்த பொருள்களின் மேல் படிகின்றன. இதனால் அந்தப் பொருள்களுக்கு ஆக்சிசன் தொடர்பு துண்டிக்கப்படுவதால், நெருப்பு அணைக்கப்படுகின்றது.

    வகைப்பாடு

    தீயணைப்பான்கள் பொதுவாக விபத்துக்கான எரிபொருள் அல்லது விபத்துக்கான காரணி ஆகியவற்றின் அடிப்படையில் பல வகைகளில் வகைப்படுத்தப்படுகின்றன. இந்த வகைப்பாடு நாட்டுக்கு நாடு வேறுபடும்.

    தேசிய தீவிபத்து தடுப்புக் கழகத்தின் தீவிபத்து வகைப்பாடு

    தேசிய தீவிபத்து தடுப்புக் கழகம் என்பது ஒரு அமெரிக்க தேசிய நிறுவனம் ஆகும். இதன்விபத்து தடுப்பு தரநிர்ணயம் உலகின் சில நாடுகாளால் பின்பற்றபடுகின்றன. இது தீவிபத்துகளை பின்வரும் நான்கு முறையில் பகுத்துள்ளது.

    A பிரிவு தீவிபத்து: (பச்சை )

    காகிதம், மரம், ரப்பர், நெகிழி போன்ற பொருட்களால் உண்டாகும் தீவிபத்துகள்.

    B பிரிவு தீவிபத்து: (சிவப்பு )

    எண்ணெய், கரைப்பான், பெட்ரோல் போன்ற திரவ பொருட்களால் உண்டாகும் தீவிபத்துகள்.

    C பிரிவு தீவிபத்து: (நீலம் )

    மின்சாதன பொருட்களால் உண்டாகும் தீவிபத்துகள்.

    D பிரிவு தீவிபத்து🙁ஆரஞ்சு

    மக்னீசியம், பொட்டாசியம், சோடியம், பாசுபரசு போன்ற எளிதில் தீபபற்றக்கூடிய உலோகங்களால் உண்டாகும் தீவிபத்துகள்.

    இந்திய தீவிபத்து வகைப்பாடு

    இந்திய அளவில் தீவிபத்தானது பின்வரும் முறையில் ஐந்து வகையாக பகுக்கப்பட்டுள்ளது. இதில் மற்ற ABCD யுடன் இந்தியாவில் E பிரிவு தீவிபத்து வகைப்பாடு உள்ளது.

    E பிரிவு தீவிபத்து

    மின்சாதன பொருட்களால் உண்டாகும் தீவிபத்துகள்.

    Exit mobile version