இன்று நாம் ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் நாம் செல்லும் இடதிற்கான பாதையை முதலில் கண்டறிந்து பின்பு அந்த பாதையை பின்தொடர்ந்து நாம் நம் இலக்கை அடையலாம்.
1. Dead Reckoning / Pilotage :
Dead Reckoning முறையில் விமானிகள் தாம் செல்லும் பாதையில் உள்ள இடங்களுக்கு இடையில் உள்ள காலம், மற்றும் தூரத்தினைக் கொண்டு நேரம் தூரம் கணக்கு போடுவர் பின் அதனை ஒரு கையேட்டில் எழுதி வைத்துக் கொள்வர். இதைப்போல் அவர்கள் கண்ணில் தெரியும் இடங்களை எல்லாம் வரைப்படத்துடன் ஒப்பீடு தாங்கள் செல்லும் பாதை கண்டறிவர்.
2.Radio Navigation :
இந்த முறை விமானிகள் தங்களின் பாதைகளை மிகவும் எளிமையாகவும் மிகவும் துள்ளியமாகவும் கண்டறிய உதவுகிறது. மிகவும் உயரத்தில் பறக்கும்போதூம், தெளிவாக தரைப்பகுதி தெரியாதப் போதும் Dead Reckoning முறையுடன் Radio Navigation முறை பயன்படுகிறது.
மேலும் ADF / NDB / VOR / OBI / VORs / DME / ILS / போன்ற பல முறைகள் ரேடியோ அலைகளை பயன்படுத்தி தங்களின் பாதையை கண்டறிகின்றனர்.
3.GPS :
ஜிபிஎஸ் இன்றைய உலகில் மிகவும் முக்கியமான ஒரு பொருளாக மாறிவிட்டது. நவீனக் கால விமானங்கள் அனைத்தும் ஜிபிஎஸ் மூலம் தான் இயங்குகின்றன. இதன் மூலம் விமானிகள் தாம் செல்லும் பாதையை மிகவும் எளிமையாகவும் மிகவும் துள்ளியமாகவும் கண்டறியப் பயன்படுகிறது.
ஜிபிஎஸ் அமெரிக்காவின் 24 இராணுவ செயற்க்கைகோள் மூலம் இயங்குகின்றது. இதில் நாம் இருக்கும் இடத்தை 2D யில் காண குறைந்தபட்சம் 3 செயற்க்கைகோள்களும் 3D யில் யில் காண குறைந்தபட்சம் 4 செயற்க்கைகோள்களும் பயன்படுகிறது.
மேலும் சில தகவல்கள்:
ADF – Automatic Direction Finder
NBD -Non-directional Radio Beacon
VOR -VHF omni directional Range
OBI – Omni Bearing Indicator
DME – Distance Measuring Equipment
ILS – Instrument Landing System