ஏவுகணைகள் என்பது தானாகவே இயங்கக்கூடிய திறன்பெற்றதாகும். மனிதனால் கட்டுப்படுத்தப்படும் இராக்கெட்டின் (Rocket) தத்துவத்தில் இயங்கும் இது நான்கு நிலைகளைக் கொண்டுள்ளது , அவை

  • வழிக்காட்டும் உணர்வி (Navigation Sensors)
  • பறக்கும் அமைப்பு (Flight Systems)
  • உந்தும் இயந்திரம் (Engine)
  • வெடிப்பொருள் அமைப்பு (War Head)
missiles

ஏவுகணைகள் பொதுவாக நான்கு வகைகளாக உள்ளன அவை அதன் பயன்பாட்டின் அடிப்படையில் வகைபடுத்தப்பட்டுள்ளது.

  • வானிலிருந்து தரையை தாக்குபவை
  • வானிலிருந்து வானிலியே தாக்குபவை
  • தரையிலிருந்து வான்நோக்கி தாக்குபவை
  • தரையிலிருந்து தரையை நோக்கி தாக்குபவை

கண்டுபிடிப்பு:

ஏவுகணைகள் இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மனியால் போரில் முதலில் பயன்படுத்தப்பட்டது. ஏவுகணைகள் திப்பு சுல்தான் என்ற இந்திய மன்னரின் காலத்திலயே இதனைப் பயன்படுத்தியதன் ஆதாரங்கள் கூறுகின்றன.


BrahMos

வழிக்காட்டும் உணர்வி :

பொதுவாக ஏவுகணைகள் தானாக செயல்படும் ஆற்றல் கொண்டது ஏவும் முன் நாம் எந்த இலக்கை நோக்கி செலுத்துகிறோமோ அந்த இலக்கை குறி தவறாமல் தாக்கி அழிக்கும் வல்லமை பெற்றது அதாவது ஆங்கிலத்தில் “Fire and forget” என்றும் கூறுவார்.

இதற்கு இந்த அளவுக்குத் துல்லியத் தன்மையை அளிப்பது இதனுள் இருக்கும் புற ஊதா கதிர்கள், லேசர் மற்றும் ரேடியோ சிக்னல்கள் ஆகும். இந்த சிக்னலின் உதவியுடன் இலக்கைக் கண்டறிந்து துல்லியமாக தாக்கும். மேலும் இவற்றில் துல்லியமாக தாக்குவதற்கு தனியாக சில அமைப்புகளும் உள்ளன (TV guidence, Visible light ).

ப்ளைட் சிஸ்டம்ஸ்:

வழியை அறிந்த ஏவுகணைக்கு இலக்கை நோக்கி செல்லதான் இந்த அமைப்பு உதவுகிறது. இதில் பொதுவாக Aeronautics சமந்தமான விடயங்கள்தான். அதாவது மேல்நோக்கி செல்ல, திசையை மாற்ற (Fins) போன்ற பல செயல்களுக்கு அதற்கென பல அமைப்புகள் இவற்றில் உள்ளன.

எஞ்சின் அமைப்புகள் :

பொதுவாக ஏவுகணைகள் ராக்கெட் எஞ்சின் அல்லது ஜெட் எஞ்சின் போன்றவை முக்கிய எஞ்சின்களாக உள்ளது.அதாவது பூமியின் உள்ளே செயல்படும் சில ஏவுகணைக்கு ஜெட் எஞ்சினும். கண்டம் விட்டு கண்டம் செல்லும் ஏவுகணைக்கு ராக்கெட் எஞ்சினும் பயன்படுத்தப்படும்.

எஞ்சின் பொதுவாக பல படிநிலைகளை கொண்டது ஒவ்வொரு படிநிலையும் ஒவ்வொரு எரிப்பொருளையும் எறிவதற்கு முக்கியப்பங்கு வகிக்கும் ஆக்சிஜெனும் அடைக்கப் பட்டிருக்கும்.

தலையமைப்பு:

இதனை War head என்று கூறுவார்கள் இதில் தான் முக்கியப் பொருளான அணு அல்லது வெடிப் பொருட்கள் வைக்கபடும்.

செயல்படும் விதம் :

ஏவுகணைகள் அதனுடைய ஏவும் தளத்திலிருந்து ஏவிய பிறகு அது தன்னுள்ளே இருக்கும் காற்றையும் எரிப்பொருளையும் சரியான விகிதத்தில் கலந்து அதனுள் இருக்கும் எரியூட்டும் அறையில் எறிந்த பிறகு முழு வேகத்துடனும் அதிக வெப்பத்துடனும் வெளியே தள்ளும். அவ்வாறு தள்ளும் போது ஏற்படும் விசையால் முன்னோக்கி வேகமாக செல்கிறது.

தத்துவம்:

நியூட்டனின் மூன்றாம் விதி

ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான மற்றும் எதிர்வினை உண்டு

இந்தியாவின் ஏவுகணைகள்:

ஏவுகணைவகைதூரம்
MICAவான் – வான்500மீ – 80கிமீ
அஸ்திராவான் – வான்80கிமீ – 110கிமீ
நோவாட்டர் K -100வான் – வான்300கிமீ – 400கிமீ
அக்னி Iநடுத்தர தூரம்700கிமீ – 1200கிமீ
அக்னி IIநடுத்தர தூரம்2,000கிமீ – 3,500கிமீ
அக்னி IIIஇடைநிலை தூரம்3,000கிமீ – 5,000கிமீ
அக்னி IVஇடைநிலைதூரம்3,500கிமீ – 4,000கிமீ
அக்னி Vகண்டம் விட்டு கண்டம்7,000கிமீ – 8,000கிமீ
அக்னி VIகண்டம் விட்டு கண்டம்11,000கிமீ – 12,000கிமீ
பிரித்திவி Iகுறுகிய தூரம்150கிமீ
பிரித்திவி IIகுறுகிய தூரம்250கிமீ – 350கிமீ
பிரித்திவி IIIகுறுகிய தூரம்350கிமீ – 600கிமீ
சவுர்யாநடுத்தர தூரம்700கிமீ – 1,900கிமீ
தனுஷ்குறுகிய தூரம்350கிமீ
சகாரிக்கா (K-15)நடுத்தர தூரம்700கிமீ
K4இடைநிலைதூரம்3,500கிமீ
K5இடைநிலைதூரம்5,000கிமீ
K6கண்டம் விட்டு கண்டம்6,000கிமீ
இந்திய ஏவுகணைகள்

சமீபத்திய பதிவுகள்:

இந்த தகவலை மற்றவர்களுக்கும் பகிர!

What is your reaction?

1
Excited
0
Happy
0
In Love

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in Engineering

You may also like