தேள்

தேள் என்பது நம் வீட்டில் நமக்கே தெரியாமல் வாழும் பூச்சி. தேள் கொட்டியவுடன் மிகவும் வேதனையாகவும் வலி மிகுந்ததாகவும் இருக்கும். தேள் கொட்டினால் உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும், சரியாக மருத்துவம் எடுக்காதவர்களுக்கும் அலர்ஜி உள்ளவர்களுக்கும் ஆபத்து நிச்சயம் உண்டு. இதற்கான அறிகுறி, முதலுதவி, மருத்துவம் பற்றி கீழே காண்போம்.” 

அறிகுறிகள்

 • தேள் கொட்டிய இடத்தில் சிறிது சிவந்து காணப்படும்.
 • தேள் கொட்டியவர்க்கு கூச்சம், வலி, எரிச்சல் போன்றவை உண்டாகும்.
 • உடல் முழுவதும் உணர்வின்மை.
 • உணவு விழுங்குவதில் சிரமம்.
 • உயர் இரத்த அழுத்தம் / உயர் ரத்த அழுத்தம்.
 • துரித இதயத் துடிப்பு.
 • அதிகமான வியர்த்தல்.
 • மூச்சு விடுவதில் சிரமம்.
 • வாந்தி எடுத்தல்.
 • தவறான கண் இயக்கங்கள்.
 • மங்களான பார்வை.
 • அதிகமாக எச்சில் ஊறுதல்.
 • நாக்கு மரத்துபோதல்.

முதலுதவி

 1. முதலில் தேள் கொட்டிய இடத்தில் சோப்பு போட்டு சுத்தமான நீரால் கழுவ வேண்டும்.
 2. பிறகு தேள் கொட்டிய இடத்தின் மீது 10 நிமிடம் ஐஸ் கட்டியை வைக்க வேண்டும். பின் சிறிது நேரம் கழித்து திரும்ப செய்ய வேண்டும். இதனால் தேள் கொட்டியதால் ஏற்பட்ட வீக்கம் மற்றும் வலி குறையும்.
 3. பாதிக்கபட்ட இடத்தை இதய மட்டதிற்கு மேலே வைத்திருக்க வேண்டும்.
 4. சாப்பாடு விழுங்குவது சிரமமாக இருந்தால், சாப்பாடு உண்ண வேண்டாம்.
 5. தேள் கொட்டிய இடத்தில் பிளேடால் அறுக்கவோ, விஷத்தை உறிஞ்சவோ முயற்சிக்க கூடாது.
 6. பதற்றபடாமல் மிகவும் அமைதியாக இருக்க வேண்டும். இது விஷம் உடல் முழுவதும் பரவுவதை மெதுவாக்கும்.”

தேள் கொட்டினால் குணப்படுத்து எளிய மருந்து மற்றும் முதலுதவி

 • புதிதாக பறித்த மாவிலையை நன்கு அரைத்து அதிலிருந்து சாறை பிழிந்து எடுக்க வேண்டும். அந்த சாரை தேள் கொட்டிய இடத்தில் தேய்க்க வேண்டும்.இவ்வாறு ஒரு நாளைக்கு இரண்டு முறை என மூன்று நாட்கள் செய்ய வேண்டும்.


 • மூன்று தேக்கரண்டி பெருங்காய பொர எடுத்து, அதில் சிறிதளவு சுடு நீர் சேர்த்து பேஸ்டாக மாற்ற வேண்டும். பின் அந்த பேஸ்டை தேள் கொட்டிய இடத்தில் தடவ வேண்டும். இதனை வலி குறையும் வரை தொடர வேண்டும்.
 • ஐந்து அல்லது ஆறு பூண்டு பற்களை எடுத்து அம்மியில் வைத்து பசை போல் அரைத்து அதனை தேள் கொட்டிய இடத்தில் தடவ வேண்டும். பின் மூன்று மணி நேரம் கழித்து கழுவ வேண்டும். வலி இருந்தால் இதனை மீண்டும் செய்ய வேண்டும்.
 • துளசி இலையை கொத்தாக பிடுங்கி அம்மியில் வைத்து அரைத்து ஜுஸ் எடுக்க வேண்டும். இதில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து தேள் கொட்டிய இடத்தில் தடவ வேண்டும். பின் சில மணி நேரம் உட்கார்ந்து இருந்து விட்டு மறுபடியும் இதனை செய்ய வேண்டும்.
 • இரண்டு தேக்கரண்டி மஞ்சள் தூளுடன் ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கி பேஸ்டாக மாற்ற வேண்டும். இதனை தேள் கொட்டிய இடத்தில் தடவ வேண்டும். வலி மற்றும் வீக்கம் குறையும் வரை இதை தொடர வேண்டும்.
 • வலியும் வீக்கமும் குறையாமல் இருந்தால் உடனே டாக்டரிடம் செல்லவும்.
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பகிர!

What is your reaction?

0
Excited
0
Happy
0
In Love

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *