காந்தமிதவுந்து அல்லது மிதக்கும் தொடர்வண்டி என்பது காந்தத்தால் மிதத்தல் தொழில்நுட்பம் மூலம் சக்கரங்களின் உதவியில்லாமல் மிதந்து கொண்டே செல்லக்கூடிய தொடர்வண்டி ஆகும். இது ஊர்ந்து செல்ல ஆரம்பிக்கும் போது இதன் பாகங்கள் அனைத்தும் தரையில் படாது. காந்தப்பாதையில் செல்லும் இந்தத் தொடர்வண்டிகளின் வேகம் மணிக்கு 580 கிலோமீட்டர்களையும் தாண்டிச் செல்ல வல்லது.

Read also: மணிக்கு 7,00,000 km/hr சாதித்து காட்டிய நாசா | Parker solar probe

தற்போது உள்ள தொடர்வண்டிகளை  விட இதனால் திடிரென வேகத்தை குறைக்கவும் அதிகரிக்கவும் முடியும்.

இவைகள் பொதுவாக MAGLEV என்று அழைக்கப்படுகிறது. இந்த மாதிரியான ரயில்களுக்கு சர்கரங்கள் ஏதும் கிடையாது காந்தங்களின் உதவியால் தரையில் இருந்து ஒருசில அங்குலங்கள் மட்டுமே உயர்ந்து மணிக்கு 500 முதல் 600 km வரை செல்லும் திறனுடையது.
இந்த மாதிரியான ரயில்கள் சீனா ஜப்பான் மற்றும் கொரியா போன்ற நாடுகளில் தான் அதிகம் காணப்படுகிறது.

Read also : பெட்ரோல் என்ஜினை விட டீசல் என்ஜின் ஏன் கனமாக உள்ளது | science with tamil

எப்படி இயங்குகிறது ?

இரயிலின் கீழ்ப்புறத்தில் வட மற்றும் தென் துருவம் பார்த்து இரண்டு காந்தங்கள் வைக்கப்பட்டிருக்கும் (அதிக எடை மற்றும் வேகதிற்காக மின் காந்தங்கள் பயன்படுத்தபடுகிறது ).

இரயிலின் கீழே உள்ளதுபோலவே தண்டவாளங்களிலும் காந்த சக்தி ஊட்டப்பட்டிருக்கும் இந்த இரயிலின் தண்டவாளங்கள் ஸ்டீல் மூலம் செய்யப்பட்டிருக்கும். அவ்வாறு  ஒத்தகாந்த துருவங்கள் ஒன்றை ஒன்றை பாக்கும்போது இரண்டும் விலகிச்செல்லும் தன்மைக்கொண்டதால் இரயில் முன்னேறி செல்ல வழிவகுகிறது.

இந்த இரயில் இரண்டு தொழில்நுட்பங்கள் மூலம் இயங்குகிறது, அவை 
  1. Electromagnetic suspension 
  2. Electrodynamic suspension ஆகும் .

Electromagnetic suspension 

இந்த தொழில்நுட்பத்தில் இரயில்கள் நம் சென்னையில் உள்ள மெட்ரோ இரயில்களைப் போல இரயில் தண்டவாளத்துடன் பினைகப்பட்டிருகும், அனால் இதில் இரயில் சிறிது இடைவெளியில்  மின்காந்த தத்துவத்தின்படி நிலைநிறுதப் பட்டிருக்கும். இதில் உள்ள இடைவெளியை எப்போதும் ஒரேமாதிரியாக வைப்பது என்பது மிகவும் சவாலான ஒன்றாகவே கருதப்படுகிறது.

Electrodynamic suspension

இந்த தொழில்நுட்பமானது நாம் முன்னே பார்த்தது போல் இரண்டு துருவங்களின் எதிரெதிர் பக்கங்களின் கவரும் தன்மையால் இரயில் முன்னேறி செல்கிறது.  

இந்த தகவலை மற்றவர்களுக்கும் பகிர!

What is your reaction?

0
Excited
0
Happy
0
In Love

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *

More in Engineering

You may also like