சுருக்கம்:
செவ்வாய் கிரகத்தில் நெல் விளைவதற்கு தேவையான அனைத்து விதமான சத்துக்களும் உள்ளதாக “Lunar and Planetary Science” என்ற கருத்தரங்கில் அபிலாஷ் ராமச்சந்திரன் என்ற ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
செவ்வாய் கிரகத்தின் ஆய்வுகள் ஒவ்வொரு நாளும் புதிய மற்றும் ஆச்சரியம் மூட்டும் பல தகவல்கள் வெளிவந்து கொண்டே உள்ளது. தற்போது டெக்ஸாஸ் மாகணத்தில் நடந்த “Lunar and Planetary Science” என்ற கருத்தரங்கில் அபிலாஷ் ராமச்சந்திரன் என்ற ஆய்வாளர் செவ்வாயில் நெல் வளர்வதை பற்றி பேசியுள்ளார்.
இதில் அவர் கூறியது “செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்புவது பற்றி நாம் சிந்தித்துக்கொண்டு உள்ளோம்… ஆனால் அங்கு எல்லாவற்றையும் நம்மால் கொண்டு செல்ல இயலாது, அது மிகவும் செலவு மிகுந்த ஒன்றாக அமையும்”
Also Read: Trending Science News in Tamil | எடையை குறைக்க க்ரீன் டீ உதவுகிறதா?
செவ்வாயின் மண்ணில் நெல் விலையத் தேவையான அனைத்து சத்துகளும் உள்ளது, அதே சமயம் தாவரங்களின் வளர்ச்சியை பாதிக்கும் பெர்குலோரைடுகளும் அதிகளவில் உள்ளது, இது தாவரங்களின் வளர்ச்சியை தடுக்கும் திறன் உடையது.
பெர்குலோரைடுகள் இரசாயன கலவைகள் ஆகும், அவை ராக்கெட் எரிபொருள், பட்டாசு மற்றும் உர உற்பத்தி போன்ற பல்வேறு தொழில்துறை செயல்முறைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. அவை தாவர வளர்ச்சியில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.
ஏன் செவ்வாயில் நெல்?
மற்ற அனைத்து பயிர் வகைகளை விட நெல் தான் மிகவும் அதிகமாகவும், அவை வளர்ந்த பின் மேலே உள்ள தோலை எளிதாகவும் நீக்கி பயன்படுத்த முடியும்.
ஆய்வு:
அபிலாஷம் அவரது குழுவினரும் சில தொட்டிகளில் நெல்லை வளர்த்து அதன் வளர்ச்சியை ஆய்வு செய்தனர்.
மொத்த தொட்டிகளில் சிலவற்றில் செவ்வாயின் மண் மாதிரியும் சிலவற்றில் சுத்தமான மண் கலவையைக் கொண்டும் நிரப்பி ஒரு நாளைக்கு இரண்டு முறை என்ற விகத்தில் நீரையும் அளித்து வந்துள்ளனர்.
Read Also: தாய்பாலில் நுண் பிளாஸ்டிக் துகள்கள்!
ஆய்வின் முடிவு:
அவர்கள் எதிர்பார்த்தது போல் அனைத்து விதமான சாடிகளிலும் நெல் வளர்ந்து இருந்தது, ஆனால் சுத்தமான மண்ணில் வளர்ந்த நெல்லின் வளர்ச்சியை விட செவ்வாய் கிரகத்தின் மாதிரியில் நெல்லின் வளர்ச்சி குன்றி காணப்பட்டது.
இதற்கு காரணம் செவ்வாயின் மண்ணில் அதிகளவில் உள்ள பெர்குலோரைடுகள் தான் காரணமாக அமைவது கண்டறியப்பட்டது.
மீண்டும் அபிலாஷம் அவரது குழுவினரும் அனைத்து விதமான நெல் ரகங்களையும் வளர்த்து சோதனை செய்ததில் ஒரு காட்டு நெல் இரகத்தை (மிகுந்த வறட்சியினை கூட தாக்குபிடிக்கும் இரகம்) ஜீன் மாற்றம் மூலம் சில ஜீனை மாற்றி வளர்த்ததில் இந்த இரகம் மட்டும் மண்ணில் பெர்குலோரைடுகள் இருந்தாலும் அவற்றை எதிர்த்து வளர்வதை கண்டறிந்தனர்.
எந்தவொரு நெல் பயிரும் ஒரு கிலோ கிராம் மண்ணில் 3 கிராம் பெர்குலோரைடுகள் இருக்கும்போது வளர்வதில்லை, ஆனால் பெர்குலோரைடுகளின் அளவு ஒரு கிராம் என்று குறையும்போது செவ்வாயின் மண்ணில் இந்த காட்டு இரகம் மட்டும் புதிய தளிர் மட்டும் வேர்களை விடுவது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த ஆய்வு தாவரத்தின் SnRK1a என்ற ஜீனை மாற்றியமைக்கும் போது செவ்வாயில் மனிதனால் நெல் ரகங்களை வளர்க்க இயலும் என்று கருதப்படுகிறது.
Source: https://www.hou.usra.edu/meetings/lpsc2023/pdf/2990.pdf