Private DNS – குழந்தைகளை பாதுகாக்கும் DNS அம்சம் – தமிழில்

நமது அலைபேசிகளில் DNS என்ற ஒரு அம்சம் உள்ளது, இதனை பயன்படுத்தி விளம்பரங்களை தடுத்தல் மற்றும் பாதுகாப்பு வழங்கல் போன்ற சேவைகளை நாம் பெறலாம்.

எப்படி இந்த அம்சம் உங்கள் அலைபேசியில் உள்ளதா என கண்டறிவது?

தற்போது உள்ள அனைத்து அலைபேசிகளிலும் இந்த அம்சம் உள்ளது, இதனை கீழே உள்ள முறைகள் மூலம் கண்டறியலாம்.

படி 1:

உங்கள் அலைபேசியின் ⚙️Settings பக்கத்திற்கு செல்லவும்.

படி 2:

பின்பு கீழே உள்ளவாறு அடுத்தடுத்த பக்கத்திற்கு செல்லும்போது DNS என்ற ஒரு அம்சம் இருக்கும்.

📱 ⚙️ Settings > Network & Internet > Advanced > Private DNS.

இல்லையேல் DNS என்று ⚙️Settings பக்கத்தில் 🔍Search செய்தால் உங்களுக்கு இந்த அம்சம் கிடைத்துவிடும்.

DNS அம்சத்தின் ⚙️Settings பக்கத்தில் “Off“, “Automatic” மற்றும் “Private DNS provider hostname” என மூன்று விருப்பங்கள் இருக்கும்.

இதில் மூன்றாவதாக உள்ள Private DNS provider hostname என்ற விருப்பத்தை தேர்வு செய்து adult-filter-dns.cleanbrowsing.org அல்லது family-filter-dns.cleanbrowsing.org என்று பதிவிட்டு “Save” அல்லது என்ற பொத்தானை அமுக்கவும்.

Also Check: SciTamil Stories

இது பின்வரும் தலைப்புகளில் உள்ள வேலைகளை செய்யும்.

அலைபேசி (Mobile Phone 📱) செயலிகளை கொண்டு விளம்பரங்களை தடுத்தல், பாதுகாப்பு வழங்கல் மற்றும் “Parental Control” போன்ற வசதிகளை பயன்படுத்துவதற்கு பதில் DNS அம்சத்தில் சில URL மூலம் அதே வசதிகளை பெறலாம்.

Adguard DNS, Google DNS மற்றும் Cloudfare போன்ற பல நிறுவனங்கள் இத்தகைய வசதிகளை வழங்குகிறது.

DNS Settings
இணையத் திருட்டு

கீழே உங்களுக்கு எந்த மாதிரியான பாதுகாப்பு வேண்டும் என்பதை அறிந்து அதை பயன்படுத்தலாம்.

ஆபாச இணையதளங்களை முடக்காமல் கீழுள்ளவற்றை மட்டும் தடுக்க இவற்றை பயன்படுத்தலாம்.

சாதனம்நெறிமுறைமுகவரி
💻DNS, IPv494.140.14.14 மற்றும் 94.140.15.15
💻DNS, IPv62a10:50c0::ad1:ff மற்றும் 2a10:50c0::ad2:ff
💻 DNS-over-HTTPShttps://dns.adguard-dns.com/dns-query
💻📱DNS-over-TLStls://dns.adguard-dns.com
💻DNS-over-QUICquic://dns.adguard-dns.com
💻DNSCrypt, IPv4வழங்குபவர்: 2.dnscrypt.default.ns1.adguard.com IP: 94.140.14.14:5443
💻DNSCrypt, IPv6வழங்குபவர்: 2.dnscrypt.default.ns1.adguard.com IP: [2a10:50c0::ad1:ff]:5443
These servers block ads, tracking, and phishing.

Also Check: எடையை குறைக்க க்ரீன் டீ உதவுகிறதா?

குழந்தைகள் உள்ள குடும்பத்தினர் இதை பயன்படுத்தலாம்:

இந்த சர்வர்கள் கீழ்கண்ட வேலைகளை செய்யும்:

சாதனம்நெறிமுறைமுகவரி
💻 DNS, IPv4185.228.168.10 மற்றும் 185.228.169.11
💻 DNS, IPv62a0d:2a00:1::1 மற்றும் 2a0d:2a00:2::1
💻 DNS-over-HTTPShttps://doh.cleanbrowsing.org/doh/family-filter/
💻 📱DNS-over-TLStls://adult-filter-dns.cleanbrowsing.org
💻 DNSCrypt, IPv4வழங்குபவர்: cleanbrowsing.org IP: 185.228.168.10:8443
💻 DNSCrypt, IPv6வழங்குபவர்: cleanbrowsing.org IP: [2a0d:2a00:1::1]:8443
Blocks access to all adult, pornographic and explicit sites, including proxy & VPN domains and mixed content sites.

இதன் பாதகம் மற்றும் சாதகங்கள் இந்த பக்கத்தின் கடைசியில் இணைக்கப்பட்டுள்ளது.

இதில் சந்தேகங்கள் இருந்தால் Whatsapp, Instragram மற்றும் Telegram போன்ற ஊடங்கங்கள் மூலம் நாங்கள் சந்தேகங்களை தீர்த்து வருகிறோம்.

குறிப்பு: Whatsapp, Instragram மற்றும் Telegram போன்ற செயலிகளில் மூலம் அனுப்பப்படும் கேள்விக்கான பதில் எங்கள் இணையத்தளத்தின் உறுப்பினருக்கு மட்டுமே அளிக்கப்படும் வகையில் இணையத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

எனவே மற்றவர்கள் கீழே உள்ள “Comments” பகுதியில் உங்களின் கேள்வியை கேட்கலாம் இது உங்களை உறுப்பினராகவும் இணைத்துக்கொள்ளும்.

சமூக ஊடங்களில் இல்லாதவர்கள் info@scitamil.in என்ற முகவரிக்கு உங்களின் சந்தேகங்களை அனுப்பலாம்.

இதைபோல் மேலும் பல முகவரிகளை பற்றி அரிய:

இங்கே செல்லவும்


சாதகமும் பாதகமும்:

  • அனைத்து விதமான ஆபாச இணையத்தளங்களையும் தடுத்துவிடும்
  • எந்தவிதமான VPN செயலிகள் பயன்படுத்தினாலும் ஆபாச இணையத்தளங்களை பார்க்க முடியாது.
  • இது மிகவும் பயனுள்ள ஒன்றாகும், எதனால் ஆபாச இணையத்தளங்கள் வேலை செய்யவில்லை என யாருக்கும் தெரியாது
  • Youtube போன்ற செயலிகளில் உங்களால் கருத்துகளை பதிவிடவோ அல்லது பாரக்கவோ முடியாது.
  • கருத்துகள் (Comments) பிரிவில் சிலர் ஆபாச இணையத்தளத்தின் முகவரியை பதிவிடுவதால் இந்த சர்வர்கள் அவற்றை முடக்கிவிடும்.
Exit mobile version