நமது உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது உடலில் உள்ள வெப்பம் தான். அந்த வெப்பத்தை தவிர்க்கவே குளியல் செய்கிறோம் என்பது தான் நிதர்சனமான உண்மையும் கூட.
சரியான குளியல்:
Read also: இதோ! இரவில் தூங்கும்போது ஏன் செல்போன்களை அருகில் வைக்கக்கூடாது என்பதற்கான காரணம் 👀 3.3k views
எனவே குளியலை எப்படி செய்ய வேண்டும் என்பதை காண்போம்.
- குளியலின் முன் நாம் செய்யவேண்டிய முக்கிய காரியம் என்றால் வெறும் வயிறுதான். ஆம் வெறும் வயிற்றில் தான் குளியல் செய்யவேண்டும் .
- குளிர்ந்த நீரில், காலில் இருந்து தான் குளியல் செய்ய ஆரம்பிக்க வேண்டும். அப்படி செய்யும்போது தான் காலில் இருந்து மேலாக சூடு சென்று கண், காது, மூக்கு போன்ற துவாரங்கள் வழியே சூடானது வெளியே செல்லும். இதன் காரணமாகவே ஏரி, ஆறுகளில் குளித்தால் மிகவும் புத்துணர்ச்சியுடன் இருக்க காரணம். ஏரியில் முதலில் காலை நனைத்து, தலைக்கு சிறிது தண்ணீரை தெளித்துப் பின்னரே குளியல் செய்ய ஆரம்பிப்போம்.
- தலைக்கு தண்ணீர் தெளிப்பதன் மூலம் சூடானது மூளைக்கு செல்லாமல் காது,மூக்கு, மற்றும் கண் வழியே சென்றுவிடும்.
- ஏரி மற்றும் ஆறுகளில் குளிக்கும்போது சூரியனை நோக்கி குளிப்பதால் இயற்கையான வைட்டமின்-D யும் உடலுக்கு கிடைகப்பெருகின்றது.
- வாரம் இருமுறை எண்ணெய் குளியல் செய்யவேண்டும். (அது ஏன் என்று கீழுள்ள படத்தில் காணுங்கள்.)
- குளித்து முடித்தப் பின்னர் ஒரு குவளை தண்ணீர் அருந்துங்கள் அப்படி அருந்தினால் உடலில் உள்ள இரத்த அழுத்தம் சீரான நிலையை அடைகிறது.
- செயற்கை சோப்புகளை பயன்படுத்துவதை முடிந்த அளவுக்கு குறைத்துக்கொள்ள வேண்டும்.