உலகின் டாப் 10 விலைமதிப்பற்ற மற்றும் அறிய வைரங்கள் | Top 10

dia

பழங்காலத்தில் வைரம் இந்தியாவிலிருந்துதான் கிடைத்ததாகவும். தற்போது உலகில் 96% வைரம், தென்னாப்பிரிக்காவிலிருந்து கிடைக்கிறது. இப்போது இந்தியாவில், கோதாவரிக்கருகிலுள்ள சம்பல்பூரிலும், நிஜாமிலும், பல்லாரியிலும் வைரங்கள் கிடைக்கின்றன.

10.தி ஆரஞ்சு  (The orange)

இந்த 14.42 காரட் ஆரஞ்சு நிற வைரம் 2013  ஆம் ஆண்டு விற்பனையில் உலக சாதனையைப் படைத்தது. பொதுவாக நீல மற்றும் ரோஸ் நிறத்தில் காணப்பட்ட வைரங்கள் தான் இவ்வளவு விலை போகும். இதன் விலை இந்திய மதிப்பில் சுமார்  2,53,37,76,897.18 ரூபாய்  அதவாது 253 கோடி ஆகும். 

9.தி பிரின்ஸ் (The Prince)

300 வருட பழைமையான இந்த வைரம் 34.54 காரட் ரோஸ் நிற வைரமாகும். இந்தியாவில் உள்ள கோல்கோண்டா  என்ற வைர சுரங்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது. ஹைதராபாத்தில் உள்ள அரச குடும்பத்தால் இந்த வைரம் வாங்கப்பட்டது. இதன் விலை இந்திய மதிப்பில் சுமார்  2,61,29,57,425.22 ரூபாய்  அதவாது 261 கோடி ஆகும்.

8.க்ராப்ப் விவிட் பிங்க் (Graff vivid Pink)

க்ராப்ப் விவிட் பிங்க் ஒரு 24.78 காரட் ரோஸ் நிற சதுர வடிவ வைரம் ஆகும். இது பலிங் நாட்டு மன்னன் லாரன்ஸ் க்ராப்ப் என்பவர் இந்த வைரத்தை வாங்கினார். இந்த வைரத்தின் நிறம் தான் இதன் மதிப்புக்கு முழு காரணமாக கருதப்படுகிறது. இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் 306.5 கோடி ஆகும்.

7.பிங்க் ஸ்டார் (Pink star)

பிங்க் ஸ்டார் வைரம் தான் உலகிலயே மிகவும் பெரிய ரோஸ் நிற வைரம் ஆகும். 59.60 காரட் கொண்ட இந்த வைரம் ஐசக் வொல்ப் என்ற வைர வியாபாரியால் 2014 ஆம் ஆண்டு வாங்கப்பட்டது. ஆனால் அதிக விலையின் காரணமாக இந்த வைரத்தை அவர் திரும்ப ஒப்படைத்து விட்டார். இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் 480 கோடி ஆகும்.

6.விட்டேல்ஸ் பச் க்ராப்ப் (Wittelsbach Graff)

விட்டேல்ஸ் பச் க்ராப்ப் ஒரு 35.5 காரட் நீல நிறம் வைரமாகும்.இது 300 வருடங்களுக்கு முன்  இந்தியாவில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. ஆஸ்ட்ரியன் மகராணி மகுடத்தில் சிறிது காலம் இந்த வைரம் இருந்தது அதன் பின் கிப்ரப் இந்த வைரத்தை வாங்கினார். அதற்குப்பின் கர்த்தர் நாட்டில் ஒரு ஷேக் இந்த வைரத்தை வைத்துள்ளார். இந்த வைரம் பல கைகளுக்கு மாறிய காரணம் இது இராசியற்றது என்று பலரால் கருதப்படுகிறது. இதன் இந்திய மதிப்பு 536 கோடியாகும்.

5.தி டி பீர்ஸ் (The de Beers Centenary Diamond) 

தி டி பீர்ஸ்  ஒரு நிறமற்ற 273.56 காரட் வைரமாகும். இதன் முழு அளவு சுமார் 599 காரட் ஆகும். இந்த வகை வைரம் மிகவும் அரிதானதாகும். இது ஒரு Grade D நிற வைரமாகும் .இதன் இந்திய மதிப்பு சுமார் 667 கோடியாகும்.

4.தி ஹோப் (The Hope Diamond) 

இந்த அழகான 45,52 காரட் வைரம் வெறும் கண்ணால் நாம் பார்க்கும்போது நீல நிறத்திலும் புற ஊதா கதிரின் கீழ் வைக்கும் போது சிகப்பு நிறத்திலும் தோன்றும் இந்த வைரம் சபிக்கப் பட்டத்தாகவே இன்றளவும் பார்க்ப்படுகிறது . இன்று இது வாஷிங்டன்னில் ஒரு அருங்காட்சியதில் வைக்கப்படுள்ளது. இத மதிப்பு இன்று 1978 கோடியாகும்.

3.தி கல்லினம் (The Cullinan)

தி கல்லினம் ஒரு 530 காரட் நிறமற்ற வைரமாகும். இது முழுமையாக பொலிவூட்டப்பட்ட பிறகும் இதன் எடை சற்றும் குறையாமல் அப்படியே காணப்படுகிறது. இதன் இந்திய மதிப்பு தற்போது 2667 கோடியாகும்.

2.தி சன்சி (The Sancy)   

இன்று நாம் இந்த மஞ்சள் நிற வைரத்தினை பிரஞ்சு அரச மகுடத்தில் காண முடியும் இது பலரின் கைகளில் மாறி மாறி இன்று இவகளிடம் உள்ளது. இது ஒரு 55 காரட் வைரமாகும். உண்மையில் இந்த வைரத்திற்கு இன்று விலை நிர்ணயிக்க முடியவில்லை. 

1.கோகினுர் (Koh-i-Noor)

உலகிலயே இந்த வைரம் தான் மிகவும் சரியான பொலிவை பெற்றிருக்கும் வைரமாகும்.இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட இந்த வைரம் இன்று கிழக்கிந்திய கம்பெனியால் எடுத்துச்செல்லப்பட்டு இங்கிலாந்து மகாராணியின் மகுடத்தில் வைத்துள்ளனர். இதன் இந்திய மதிப்பு உலகை ஈடாக வைத்தாலும் ஈடாகாது. 

Exit mobile version