மூளையைப் பாதிக்கும் போக்குவரத்து நெரிசல் ஆய்வில் தகவல்!

போக்குவரத்து நெரிசலில் சிக்கும் சில மணிநேரத்தில் ஏற்படும் மாசுபாடு கூட நம் மூளையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஆராய்ச்சியின்படி டீசலின் மூலம் எரியூட்டப்பட்டு வெளியேறும் புகையால் மூளையின் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்ப்படுத்துகிறது என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

ஆய்வு
காற்று மாசுபாடு

பல வருடங்களாக ஆய்வாளர்கள் காற்று மாசுபாடு மூளையை நேரடியாகப் பாதிப்பதில்லை என்று தான் நினைத்துக்கொண்டு இருந்தனர் ஆனால், இந்த ஆராய்ச்சி அதற்கு முற்றுப்புள்ளியை வைக்கும் விதம்மாக அமைந்துள்ளது என இந்த ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளர் க்ரிஸ் காரிஸ்டென் கூறியுள்ளார்.

ஆய்வு:

இந்த ஆய்விற்காக நல்ல உடல் நலனுடன் உள்ள 25 நபர்களை தேர்வு செய்து, சில மணிநேரத்திற்கு சுத்தமான காற்றையும், சில மணிநேரத்திற்குப் போக்குவரத்து சூழ்நிலைக்கு ஏற்ப டீசல் புகைக் கலந்த காற்றையும் செலுத்தி மூளையின் இயக்கத்தை “வினைசார் காந்த ஒத்ததிர்வு வரைவு” (FMRI – Functional Magnetic Resonance Imaging) கொண்டு ஆராய்ந்தனர்.

ஆய்வின் முடிவு:

FMRI கொண்டு ஆராய்ந்ததில் டீசல் புகையை சுவாசிக்கும்போது மூளையின் உள் பகுதியில் உள்ள இணைப்புகளில் தகவல் பரிமாற்றம் செய்யும் அளவானது குறைந்தும், சுத்தமான காற்றை சுவாசிக்கும்போது உள் பகுதியில் உள்ள இணைப்புகளில் தகவல் பரிமாற்றம் செய்யும் அளவானது அதிகரித்தும் இருப்பது கண்டறியப்பட்டது.

மூளையின் உள் பகுதியில் உள்ள இணைப்புகளில் தகவல் பரிமாற்றம் செய்யும் அளவு குறைவதால் ஏற்படும் பாதிப்பு, ஒருவர் மன அழுத்தத்தில் உள்ள போது ஏற்படும் பாதிப்பிற்கு சமமாகும்.

இந்த பாதிப்பில் இருந்து தப்பிக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

தற்போது ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டால் உடலின் பல்வேறு உறுப்புகளில் அதன் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது, மேலும் காட்டில் ஏற்படும் திடீர் தீயினால் ஏற்படும் புகைக் கூட இதே பாதிப்பினை ஏற்படுத்தும் என ஆய்வாளர் கூறியுள்ளார்.

இந்த ஆய்வானது UBC’s Air Pollution Exposure Laboratory என்ற ஆய்வகத்தில் நடைபெற்றது.

ஆய்வின் படிவம்:

Journal Reference:

Jodie R. Gawryluk, Daniela J. Palombo, Jason Curran, Ashleigh Parker, Chris Carlsten. Brief diesel exhaust exposure acutely impairs functional brain connectivity in humans: a randomized controlled crossover study. Environmental Health, 2023; 22 (1) DOI: 10.1186/s12940-023-00961-4

குறிப்பு: ஆய்வானது வாசகர்களுக்கு புரியும் நடையில் மாற்றப்பட்டுள்ளது.

Exit mobile version