இன்று புகைப்பழக்கம் அல்லது புகையிலையை எடுத்துக்கொள்வது என்பது சிறு குழந்தைகள் முதல் பெண்கள் வரை அனைவரிடமும் பரவிக்கிடக்கிறது.
இன்றைய நாகரீக வளர்ச்சியின் காரணமாகவும் உணவு முறைகளாலும் புகைப்பிடிக்காதவர்களுக்கே ஆண்மை குறைவு, புற்றுநோய், சர்க்கரை போன்ற குறைபாடுகள் எளிதாக ஏற்படும் நிலையில் புகைப்பவர்களின் நிலையை சற்று சிந்தித்து பாருங்கள்.
உயிரிழப்பு:
1.புகையிலையால் வருடத்திற்கு 83,000 பேருக்கும் மேல் உயிரை இழக்கின்றனர்.
2.புகைபிடித்தலால் நுரையீரல் புற்றுநோய் ஏற்ப்பட்டு ஒருவர் உயிரிழக்க 90 % வாய்ப்புள்ளது.
3.நாள்பட்ட நுரையீரல் அடைப்பு (COPD) பாதிப்பால் 80% பேர் உயிரிழக்கின்றனர்.
4.தற்போது புகையிலை பொருட்களால் ஏற்படும் உயரிழப்புகள் 50% அதிகரித்துள்ளது.
|
நுரையீரல் |
உடல் அபாயங்கள்:
புகைப்பவர்கலுக்கு இதய நோய்கள் மற்றும் வலிப்புகள் ஏற்படும் வாய்புகள் மற்றவர்களை காட்டிலும் இரண்டில் இருந்து நான்கு மடங்கு அதிகமாகும்.
புகைப்பவர்களில் நுரையிரல் புற்றுநோய்கள் மற்றவர்களை காட்டிலும் ஆண்களுக்கு 25% மும் பெண்களுக்கு 25.7% மும் ஏற்படும் அபாயம் உள்ளது.
பாதிப்படையும் உடல் உறுப்புகள் :
1.நுரையீரல் பாதை,
2.சுவாச பாதை,
3.கல்லீரல்,
4.சிறுநீரகம்,
5.குரல்வளை,
6.நாக்கு,
7.உதடுகள்,
8.உள்நாக்கு,(டான்சில்)
உடலில் ஏற்படும் பாதிப்புகள்:
1.நியாபக மறதி,
2.நோய் எதிர்ப்புத் திறன் குறைபாடு,
3.தலைவலி,
4.எலும்புகளின் வளர்ச்சி,
5.இரத்த அணுக்கள் குறைபாடு,
6.விந்தணுக்கள் குறைபாடு,
7.சிறுநீரக செயலில் குறைபாடு,
8.இரண்டாம் நிலை சர்க்கரை நோய்
புகைப்பிடிகாதவர்களின் உடலைக் காட்டிலும் புகைப்பவர்களுக்கு 30% – 45% அளவிற்கு சர்க்கரை நோய் ஏற்படும் பாதிப்பு அதிகமாக உள்ளது.