இரு சக்கர வாகனங்களில் உள்ள சைலென்சரில் இருந்து ஏன் சத்தம் அதிகமாக வருகிறது மற்றும் அதன் இயங்கும் முறையைப் பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
சைலென்சர்:
சைலென்சர் என்பவை இரு சக்கர வாகனங்களில் காணப்படும் ஒரு நெடிய உருளை போன்ற அமைப்பு ஆகும், இது என்ஜின்களில் இருந்து வெளியேறும் புகையை வெளியேற்ற பயன்படும் அமைப்பு மட்டுமே என்று நீங்கள் நினைத்தால் அது தவறு!.
இது வெறும் புகையை வெளியேற்ற பயன்படும் அமைப்பு அல்ல அது எஞ்சின்களில் இருந்து வெளியேறும் சத்தத்தை குறைக்க உதவும் ஒரு பொருளாகவும் வாகனங்களில் உள்ளது.
வேலை செய்யும் விதம்:
இரு சக்கர வாகனங்களில் உள்ள எஞ்சின்கள் 2 ஸ்ட்ரோக் (2 Stroke) எஞ்சின்கள் என அழைக்கப்படும் காரணம் இதன் என்ஜின்களில் இரண்டு இயக்கம் மட்டுமே இருக்கும், அதாவது பிஸ்டன் மேல் செல்வது மற்றும் பிஸ்டன் கீழ் செல்வது என இரண்டு இயக்கங்களை கொண்டுள்ளதால் இது இவ்வாறு அழைக்கப்படுகிறது.
இது தெளிவாக புரிய வேண்டுமானால் பிஸ்டனின் இயக்கத்தை முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
சிலிண்டரின் இயக்கம்:
இரு சக்கர வாகனங்களில் காணப்படும் சிலிண்டரில் இரண்டு வழிகள் இருக்கும் மற்றும் அதனுள் உள்ள பிஸ்டன் அமைப்புக்கு இரண்டு இயக்கங்கள் இருக்கும்.
எஞ்சின் சிலிண்டரின் கீழ் உள்ள ஒரு வழி பெட்ரோல்/டீசல் மற்றும் காற்று சேர்ந்த கலவை உள்ளே செல்லவும் (மேற்கண்ட படத்தில் உள்ள சிவப்பு பாதை) மற்றொரு வழி (மேற்கண்ட படத்தில் உள்ள நீல பாதை)உள்ளே அந்த கலவை எரிந்து பின் புகை வெளியேறவும் பயன்படும் வழியாகும்.
முதல் இயக்கம்:
கிழே வலது பக்கம் உள்ள வழியின் மூலம் பெட்ரோல்/டீசல் மற்றும் காற்று சேர்ந்த கலவை சிலிண்டரின் உள்ளே வரும் அப்போது பிஸ்டன் போன்ற அமைப்பு மேலே செல்லும் இதுவே முதல் இயக்கம் அல்லது சிலிண்டரில் நடக்கும் முதல் நிகழ்வாகும். (மேலே உள்ள படம்)
இரண்டாவது இயக்கம்:
மேலே சென்ற பிஸ்டன் காற்றுடன் பெட்ரோல் சேர்ந்த கலவையை அழுத்தி ஸ்பார்க் பிளக் மூலம் எரியூட்டப்படுகிறது அப்போது எழும் அதிகப்படியான ஆற்றல் பிஸ்டனை கிழே தள்ளும், அவ்வாறு கிழே செல்லும்போது இடது பக்கம் உள்ள மற்றொரு வழி மூலம் எறிந்த புகை வெளியேறும் இதுவே இரண்டாவது நிகழ்வாகும்.
உங்களுக்கு தற்போது புகை எப்படி உருவாகிறது மற்றும் எப்படி அது வெளியே வருகிறது என்பது புரிந்திருக்கும், வாருங்கள் நாம் சைலென்சர் பற்றி இனி காண்போம்.
மேலே நாம் கண்ட இரண்டாவது இயக்கத்தின் போது புகை மட்டுமே வெளியேறுவதில்லை அதற்கு முன்னரே அதிக அழுத்தத்தில் எரிந்த எரிபொருள் மூலம் அதிக அதிர்வுகள் ஏற்பட்டும் இவை பின் சைலென்சர் மூலம் வெளியேறுவதால் அதிக சத்தத்தை ஏற்படுத்துகிறது.
ஆனால் சில வாகனங்களில் சத்தம் குறைவாக உள்ளதே அதற்கு என்ன காரணம்? என்று நீங்கள் நினைப்பது சரியே. அதை பற்றியும் கூறுகிறோம் பொறுங்கள்!
அதிக அதிர்வலைகள் சைலேன்சர் மூலம் வரும் போது இடையில் பல தடுப்பான்கள் போன்ற அமைப்பு காணப்படும், அவை அதிகமாக வரும் புகையில் இருந்து பெரிய துகள்களை தடுக்கவும் மற்றும் அதிக அளவில் ஏற்படும் அதிர்வலைகளை பல பிரிவுகளாக பிரிக்கும் வேலையை செய்கிறது.
தடுப்பான்கள் பொதுவாக காகிதம், துணியால் செய்யப்பட்ட இழை போன்ற அமைப்பு மற்றும் இரும்பு மெஷ் போன்ற பொருட்களை கொண்டு செய்யப்பட்டிருக்கும்.
இவ்வாறு அதிர்வலைகளை பிரிப்பதன் மூலம் அதிர்வுகள் குறைந்துவிடும் இதன் காரணமாக அதிகப்படியான சத்தம் குறைக்கப்பட்டு குறைந்த அளவு சத்தம் மட்டுமே வெளியேறுகிறது. இதுவே இருசக்கர வாகனங்களில் உள்ள சைலேன்சரின் வேலையாகும்.
இனி உங்களின் இருசக்கர வாகனங்களில் இருந்து அதிகப்படியான சத்தம் வெளியேறினால் உங்களின் சைலேன்சரை சரி செய்வது உகுந்த ஒன்றாக இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
முடிவு:
இருசக்கர வாகனங்களில் உள்ள சைலென்சரில் இருந்து ஏன் சத்தம் அதிகமாக வருகிறது ?
எஞ்சின்களில் இருந்து வரும் அதிகப்படியான அதிர்வலைகள் சைலேன்சரில் உள்ள தடுப்பான்கள் மூலம் சரியாக தடுக்கப்படாமல் அப்படியே வெளியேறுவதால் தான் சத்தம் அதிகமாக வருகிறது.