நமது உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது  உடலில் உள்ள வெப்பம் தான். அந்த வெப்பத்தை தவிர்க்கவே குளியல் செய்கிறோம் என்பது தான் நிதர்சனமான உண்மையும் கூட.

உண்மையில் குளியலால் கூட பல பிரச்சனைகள் வரும், குளியலை சரியாக செய்யவில்லை என்றால்.
அப்படி குளியலை கூட எப்படி செய்யவேண்டும் என்று நம் முன் தலைமுறையினர்கள் கூறியதை இங்கு காண்போம்.

சரியான குளியல்:

அது என்ன சரியான குளியல்? அதாவது நாம் செய்யும் அனைத்து காரியங்களையும் முறைப்படி செய்தால் அது சரியானது இல்லையேல் அது தவறானது ஆகும் அப்படிதான் இதுவும்.
இன்று நாம் செய்யும் குளியலில் போது செய்யும் தவறுகளை இங்கு காண்போம். ஒரு சிறிய அறையினுள் எடுத்ததும் குளியலை தலையில் இருந்து ஆரம்பிப்பது மிகப்பெரிய தவறாகும்.
இப்படி செய்வதால் உடலில் உள்ள சூடு உடலை விட்டு வெளியே செல்லாமல் உடலினுள் தங்கிவிடும். பின் உடல் சூட்டை குறைக்க எவ்வளவு நேரம் குளித்தாலும் உடல் சூடு குறையாமல் தலைவலி, ஜலதோஷம், மற்றும் கண் எரிச்சல் போன்றவைகள்  ஏற்ப்பட வாய்ப்புள்ளது.

Read also: இதோ! இரவில் தூங்கும்போது ஏன் செல்போன்களை அருகில் வைக்கக்கூடாது என்பதற்கான காரணம் 👀 3.3k views

எனவே குளியலை எப்படி செய்ய வேண்டும் என்பதை காண்போம்.

  • குளியலின் முன் நாம் செய்யவேண்டிய முக்கிய காரியம் என்றால் வெறும் வயிறுதான். ஆம் வெறும் வயிற்றில் தான் குளியல் செய்யவேண்டும் .
காரணம் : சாப்பிட்டவுடன் குளித்தவர்கள் இதை உணர்ந்திருப்பீர்கள் குளித்தவுடன் ஏப்பம் வருவது தான் அது. ஆம் குளிக்கும் முன் வயற்றில் ஏதாவது இருப்பின் நாம் குளியல் செய்யும்போது இரைப்பை மற்றும் குடலுக்கு ஒரு அழுத்தத்தை அளித்து விரைவில் செரிக்க செய்வதால் ஏப்பம் வருகிறது. இதனால் நாளடைவில் செரிமான மண்டல கோளாறு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
  • குளிர்ந்த நீரில், காலில் இருந்து தான் குளியல் செய்ய ஆரம்பிக்க வேண்டும். அப்படி செய்யும்போது தான் காலில் இருந்து மேலாக சூடு சென்று கண், காது, மூக்கு போன்ற துவாரங்கள் வழியே சூடானது வெளியே செல்லும். இதன் காரணமாகவே ஏரி, ஆறுகளில் குளித்தால் மிகவும் புத்துணர்ச்சியுடன் இருக்க காரணம்.  ஏரியில் முதலில் காலை நனைத்து, தலைக்கு சிறிது தண்ணீரை தெளித்துப்  பின்னரே குளியல் செய்ய ஆரம்பிப்போம். 
  • தலைக்கு தண்ணீர் தெளிப்பதன் மூலம் சூடானது மூளைக்கு செல்லாமல் காது,மூக்கு, மற்றும் கண் வழியே சென்றுவிடும்.
  • ஏரி மற்றும் ஆறுகளில் குளிக்கும்போது சூரியனை நோக்கி குளிப்பதால் இயற்கையான வைட்டமின்-D யும் உடலுக்கு கிடைகப்பெருகின்றது.
  • வாரம் இருமுறை எண்ணெய் குளியல் செய்யவேண்டும். (அது ஏன் என்று கீழுள்ள படத்தில் காணுங்கள்.)

  • குளித்து முடித்தப் பின்னர் ஒரு குவளை தண்ணீர் அருந்துங்கள் அப்படி அருந்தினால்  உடலில் உள்ள இரத்த அழுத்தம் சீரான நிலையை அடைகிறது.
  • செயற்கை சோப்புகளை பயன்படுத்துவதை முடிந்த அளவுக்கு குறைத்துக்கொள்ள வேண்டும்.  
Read also : இன்றே புகைப்பதை நிறுத்தினால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன ?    👀 4.3k views 
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பகிர!

What is your reaction?

0
Excited
0
Happy
0
In Love
0
Not Sure
0
Silly

You may also like

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *